பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

பன்னிரு திருமுறை வரலாறு


இருதிறப் பொருள்களேயும் ஒருங்குணர்த்து முறையில் அமைந்த இத்திருப்பாடல்களே உலக நூல் வழக்கு ஒன்றினேயே யுணர்த்தும், ஏனேச் செய்யுட்களைப் போன்று இலக்கண நூல்களில் வெறும் யாப்பியல் அமைதிக்கு உதாரண ச் செய்யுட்களாக எடுத்துக் காட்டுதல் மரபன்று என்பதும், இறைவனது திருவரு ளின் விளைவாகிய இத்திருப்பதிகங்களே இயலிசைச் சந்தப் பாடல்களுக்குரிய மூல இலக்கியங்களாகக் கொண்டு போற்றுதலே பண்டையோர் கொண்டொழு கிய முறையென்பதும் நன்கு தெளியப்படும்.

யாப்பினும் பொருளினும் வேறுபடவந்த கொச்ச கங்களேயெல்லாம் ஒரு வரையறைப்படுத்துத் தாழிசை, துறை, விருத்தம் என மூவகை இனமாக்கி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைச் செய்யுளோடும் உறழ்ந்து காட்டுவர் பின் வந்த யாப்பி லக்கண நூலாசிரியர்கள். அன்னேரால் ஒரு பாவிற்கு இனமென வகுக்கப்பட்டவை மற்ருெரு பாவிற்கும் இன மடம் எனக்கொள்ளுமாறு அவற்றின் இலக்கணம் தெளிவின் றி அமைந்திருத்தலால் அவற்றை இன்ன பாவிற்கு இனமாம் என வரையறைப்படுத்துதல் பொருந்தாதெனவும், இங்ஙனம் இன ஞ்சேர்த்தற்கு அரியனவாயினும் அவை பெரும்பான்மையும் கலிப்பா விற்கு ஏற்ற ஓசையே பெற்று வருவன ஆதலின், ஆசிரியர் தொல்காப்பியனர் அவை யெல்லாவற் றுக்கும் ஒரு பரிகாரங்கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினரெனவும், அதுவே தொன்றுதொட்டு வந்த யாப்பியல் மரபெனவும் பேராசிரியரும் நச்சினர்க்கினி யரும் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள்.

தேவாரத் திருப்பதிகங்களின் ஓசை வேற்றுமை யும் சீர்கள் மிக்கும் குறைந்தும் வருதலும் ஆகிய இவ் வியல்புகள் கலிப்பாவிற்கே யேற்றனவாதலின் இத் திருப்பதிகப் பாடல்களேக் கலிப்பாவின் வகை யென்று அடக்குதலே இவற்றை அருளிக் செய்த பெரியோர்