பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

பன்னிரு திருமுறை வரலாறு


பெருதும் வரும். அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்க ளேப் பழிச்சியும் வரும் ” என்பர் அரும்பதவுரை யாசிரியர். இங்ங்னம் வரும் வரிப்பாடல்களுள் ஆற்று வரி என்பது, உலகு புரந்து ஊட்டும் நன் னிர்மை வாய்ந்த காவிரிமுதலிய ஆறுகளே நோக்கி எழுந்த இசைப்பாட்டாகும், கானல்வரி என்பது, கடற்கரைச் சோலேயை நிலைக்களமாகக் கொண்டு பாடப்பெற்ற இசைப்பாட்டாகும். விரிமுரண் என்பது முரிவரியாதல் கூடும். முரிவரியாவது, முன்னே தொடங்கப்பெற்ற இயலமைதியாகிய யாப்பும் இசையமைதியாகிய பண்ணிர்மையும் பாட்டின் இடையிலே முரிந்து மாறும் வண்ணம் இயற்றப்பெறும் இசைப்பாட்டாகும்.

  • எடுத்த இயலும் இசையுந் தம்மின்

முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே

என்பது அரும்பதவுரையாசிரியர் காட்டிய மேற்கோட் சூத்திரமாகும். சிலப்பதிகாரத்துள் கானல்வரி, வேட் டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வாழ்த் துக்காதை ஆகிய பகுதிகளில் உள்ள இசைப்பாடல் களிற் பல, மேலே அரும் பதவுரையாசிரியர் கூறிய வரிப்பாடல்களுக்குரிய சிறந்த இ ல க் கி ய மா க அமைந்துள்ளன. தேவாரத் திருப்பதிகங்களில் காவிரி முதலிய ஆறுகளின் வளங்களைப் போற்றிப் பரவும் நிலையில் அமைந்த திருப்பாடல் ஆற்றுவரி என்னும் இசைப்பாவுக்குரிய அமைப்பினே ஒரளவு பெற்றிருத்தல் காணலாம்.

“ வரைத்தலேப் பசும்பொனே உருங்கலன் க ளுந்திவந்

திரைத்தலேச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் கரைத்தலேத் துருத்திபுக் கிருப்பதே கருத்திய்ை உரைத்தலேப் பொலிந்துணக் குணர்த்துமாறு வல்லமே ?

(2–98-1}