பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

பன்னிரு திருமுறை வரலாறு


தேத்தெத்தா வென்னக் கேட்டார்' 4 - 32 - 10 என வரும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரும், ‘தென்னுத் தெனத் தெத்தென வென்றுபாடி' 7 – 2 – 6 என வரும் சுந்தரர் தேவாரத் தொடரும் முறையே தென்ன, தென்னென, தெத்தென, தெத்தே தேத் தெத்தா, தென்னதென, தெத்தென என்னும் இசைக் குரிய அசைச் சொற்களே எடுத்து ஆண்டுள்ளன. இவ்வாறே “கந்த திந்தத் தடமென் றருவித்திரள் பாய்ந்து

போய் 2 - 5 - 4

எனவும்,

தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடும்' எனவும் வரும் தொடர்களில், தந்த, திந்த, தேம், தாம் என ஆடற்குரிய சதிச் சொற்கள் சிலவற்றை ஆளுடைய பிள்ளேயார் குறித்துள்ளார். பிள்ளேயார் அருளிய பந்தத்தால் எனத் தொடங்கும் திருத்தாளச் சதித் திருப்பதிகம், இசையுடன் பாடும் அளவிலன்றி நாடக மகளிர் ஆடரங்குகளிற் பாடி யாடுதற்கேற்ற பொருள் பொதிந்த தாளச் சொற் கட்டுகளாக அமைந் திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

இயலிசைத் தமிழாகிய தேவாரத் திருமுறைகளில் ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த திருப்பதிகங்களில் யாப்பு வகையினைக் கட்டளே என வழங்குதல் மரபு. கட்டளே என்பது, மாத்திரை யளவும் எழுத்தியல் நிலேயும் பற்றிச் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறு பாடாகும். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை உரை யில் ஆடல் பாடல் இசையே தமிழே’ என வரும் தொடர்க்குப் பொருள் கூறுமிடத்து, தமிழ் என்பதற்கு "வடவெழுத்தொரீ இவந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டளேக் கூறுபாடுகளும் என அரும் பத உரையாசிரியர் விளக்கவுரை கூறுவர். இதனேக் கூர்ந்து