பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 495

இத்திருமுறையில் 100 முதல் 116 வரையுள்ள பதிகங்கள் பழம் பஞ்சுரம் என்ற பண்னுக்கு உரியன. திருமுறைகண்ட புராணத்தில் ஆளுடைய பிள்ளேயார் அருளிய பதிகங்களுக்கு அமைந்தன எனக் கூறப் பெற்ற பண்களில் சாதாரி என்ற பண்ணே யடுத்துப் புற நீர்மை என்ற பண் குறிக்கப்பெற்றுளது. எனினும் தேவாரத் திருமுறையேடுகளிலும் இதுகாறும் வெளி வந்த பதிப்புக்களிலும் சாதாரிக்கும் புற நீர் மைக்கும் இடையிலே பழம்பஞ்சுரம் என்ற பண்ண மைந்த பதிகங்கள் பதினேழும் கெளசிகம் என்ற பண்ணுக்குரிய தாகக் குறிக்கப்பெற்ற மாலேமாற்று என்ற பதிகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் அருளிய பதிகங்களில் பழம் பஞ்சுரம் என்ற பண் அமைந்திருப் பது பற்றியும் அப்பதிகங்களுக்குரிய கட்டளே வகை பற்றியும் திருமுறைகண்ட புராண ஆசிரியர் தெளி வாகக் குறிப்பிடவில்லே. எனினும் ஆளுடைய பிள்ளையார் திருவாலங்காட்டின் உள்ளே செல்லாது அவ்வூரெல்லேயில் தங்கியபொழுது பாடிய துஞ்ச வருவார்’ என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத் தினக் குறிப்பிடக்கருதிய சேக்கிழாரடிகள்,

"துஞ்ச வருவார்’ என்றே எடுத்த ஒசை சுருதி முறை

வழுவாமல் தொடுத்த பாடல் 冬令 经 பஞ்சுரமாம் பழையதிறம் கிழமைகொள்ளப் பாடிஞர்" 2 என அப்பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணில் பாடப்பெற்ற செய்தியைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே ஞான சம்பந்தர் பாடிய பதிகங்களில் பழம்பஞ்சுரம் என்ற பண்ணமைந்த பதிகங்கள் உள என்பது நன்கு துணி யப்படும். துஞ்சவருவார்’ என்ற பதிகத்திற்குரிய பழம் பஞ்சுரம் என்ற பெயரை ஒருவர் சொல்ல மற்றவர்

2. ரிய-திருஞான சம்பந்தர் 10.10.