பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

பன்னிரு திருமுறை வரலாறு


பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களில் இன்ன இன்ன பதிகங்கள் இன்ன இன்ன செவ்வியில் அருளிச் செய்யப்பெற்றன எனவும், அவற்றுட் சிலவற்றின் பண்கள் இவையெனவும், சில திருப்பதிகங்களுக்குரிய பெயர்கள் இவையெனவும் விரித்துக் கூறியுள்ளார் . திருப்பதிகங்கள் பாடப்பெற்ற செவ்வியினைக் குறிப் பிடும் இடங்களில் அவ்வத் திருப்பதிகங்களின் கட்டளை யமைப்பு இனிது புலப்படுத்தற்கு ஏற்ற சந்தப்பாக்களே யும் ஆங்காங்கே அமைத்துள்ளார். நம்பியாரூரர் முதன் முதற் பாடியருளிய பித்தா பிறைசூடி ’’ என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகம் இந்தளம் என்ற பண் ணிற் பாடப்பெற்றதென்பதும், அதன் கண் அமைந்த தாள அமைதியும் ஆகிய குறிப்புக்களே,

  • முறையால்வரு மதுரத்துடன் மொழியிந்தள முதலிற்

குறையாநிலே மும்மைப்படி கூடுங்கிழ மையில்ை நிறைபாணியின் இசைகோள் புணர் நீடும் புகல் -

యొg65) ఊ5 t_{T} இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் வல்லான்’ (பெரிய-தடுத்தாட்-75)

எனவரும் பாடலில் சேக்கிழாரடிகள் தெளிவாகக் குறித்துள்ளார்.

‘பித்தா பிறைசூடி’ என்ற பதிகத்தின் இசை யமைதியினை விளக்கும் இச்செய்யுள், அத்திருப்பதிகத் தின் இசை நிலையை விலக்கும் அதே யாப்பில் அமைந் திருத்தல் காணலாம். ஏழாம் திருமுறையின் முதலி லுள்ள இத் திருப்பதிகம் இந்தளப் பண்ணுக்கு உரிய தென்றும் இந்தளப் பண்ண மைய நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள் இரண்டு கட்டளே பெறுவன என்றும் திருமுறைகண்ட புராணம் கூறும் குறிப்பு பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறும் குறிப்புக்களுடன் ஒத்திருத்தல் காணலாம். இவ்வாறே தேவாரத்