பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 567

இசைத்திறத்தில் நன்கு தேர்ந்தவர்களேயன்றி இசைத்துறையிற் போதிய பயிற்சியும் குரல் வளமும் பொருளுணர்ந்து பாடும் மொழிப்பயிற்சியும் உடல் வன் மையும் நன்கு வாய்க்கப்பெருத முதியவர்களும், இறைவன் பாற்கொண்ட பேரன் பாகிய பத்தியில்ை தம்மால் இயன்ற அளவு பத்திமைப் பாடல்களாகிய இசைப்பாடல்களைப் பாடி இறைவனே வழிபட்டு மகிழ்ந் தார்கள். இச்செய்தி,

'கோழைமிடருக கவிகோளுமிலவாக இசைகூடும் &

5位!况p岳设j伊6ö ஏழையடியாரவர்கள் யாவை சொன சொன்மகிழும் ஈசன்’

[3–71 — 13 என வரும் திருப்பாடலால் இனிது புலகுைம்.

பண்டை நாளில் தமிழகத்திலுள்ள திருக்கோயில் களில் தெய்வப் பாடல்களே இசையுடன் பாடுவோரும் யாழில் இசைப்போரும் ஆகிய இசைவாணர்கள், அழுக்கே ருத தூய உடையும் நோயின்றித் தூய்மை வாய்ந்த உடல் வனப்பும் மாசற்ற தூய நன்னெஞ்சும் உடையராய் விளங்கினர் ன் பதனே,

'புகை முகந் தன்ன மாசில் தூவுடை முகைவச யவிழ்ந்த தகை சூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலேயர் இன்னகைப் பருமந்தாங்கிய பணிந்தேந் தல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க ?

(திருமுருகு 138-147) எனவரும் தொடர்களால் சங்கப்புலவராகிய நக்கீரர் விரித்துக் கூறியுள்ளார்.