பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570

பன்னிரு திருமுறை வரலாறு


பெருமையுடைய பொருள் பி றி தி ன் ைம யி ன், பரமனேயே பாடுவாராகிய அவ்வடியார்களுக்கு இறை வன் தன் சீனத் தானே பரிசிற்பொருளாக வழங்கியருள் வான் என் பார், அளப்பில கீதஞ்சொன்னர்க்கு அருளு மாறு (கைம்மாருக நல்கத்தக்க பொருள்) அடிகள்தாம் (இறைவனே) என் ருர் எனக் கொள்ளுதற்கும் இட முண்டு. இத்திருப்பாடல், இறைவனே அன்பினுல் வழி படுதற்கு இனிய சாதனமாக விளங்குவன இசைப் பாடல்களே யென்ற உண்மையினே நன்கு வலியுறுத் தல் காண்க.

சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசைத் திறத்தாற் புலப்படுத்துவது இசையாகும். மூலா தாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத் தியாய்ப் பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம். மக்கள் பெற்ற உடம்பினது அளவு தம் கையால் தொண்னு ற் ருறங்குலம். இதனுள் மேலே நாற்பத்தேழரை யங்குல மும் கீழே நாற்பத்தேழரை யங்குலமும் விட்டு நடு நின்ற ஒரங்குலம் மூலாதாரம், இதன் மேலே நால் விரல்விட்டுப் பின்னதாரம் நின்றியங்கும்.

" துய்ய வுடம்பளவு தொண்ணுாற்ரு றங்குலியா

மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் - வையத் திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக் கருவாகும் ஆதாரங் காண் ’

என்ற பழம்பாடல், இசைக்குப் பிறப்பிடமாயுள்ள மூலா தாரத்தின் அமைப்பின விளக்குவதாகும். இம் மூலா தாரத்தை யடுத்து உந்தித்தானத் தெழுந்த வளி யினைத் துணையாகக் கொண்டே உயிரும் மெய்யுமாகிய எழுத்தொலியும் ஏனைய இசையோசைகளும் தோன்றி இடைபிங்கலேயால் வெளிப்படும் என்பர். இந்நுட்பம் ,