பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 575

இயக்கம் உடையனவாய் இசைப்பன. மெலிவு, சமன்) வலிவு என்ற இம்மூன்றையும் மூவகையியக்கம் என்றும் மூவகைத் தானம் என்றும் இளங்கோவடிகள் குறிப் பிடுவர். இம் மூன்றினேயும் பிற்காலத்தார் வழக்கின் படி முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனச் சேக் கிழாரடிகள் வழங்கியுள்ளார்.

வீணே நரம்பு மெலிவுத்தானத்திலேயுள்ள குரல் இசைக்கு இசை கூட்டப்பட்டிருந்தால், அதன் சரிபாதி நரம்பிலே சம இசையாகிய குரலும், அதன் நான்கி லொரு கூற்றிலே உச்ச இசையாகிய குரலும், மூன்றி லொரு கூற்றிலே குரலுக்கு ஐந்தாம் இசையாகிய இளியும் ஒலிக்கும். ஏழிசைகளும் படிப்படியாக மேன் மேல் உயர்ந்து செல்லும் இசை நிரலை ஆரோசை எனவும், படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் இசை நிரலே ‘அமரோசை’ எனவும் சேக்கிழார் வழங்குவர். இவ் விரண்டினையும் முறையே ஏற்றம் இறக்கம் என்னும் பொருளினவாகிய ஆரோகணம் அவரோகணம் என்ற சொற்களால் வழங்குவர் இக்காலத்தார்.

இசைச் சுரங்கள் இரண்டிற்கு இடையேய ைமந்த ஓசை வேறுபாட்டினே அளத்தற்கு அமைந்த நுண்ணிய இசையளவினைச் சுருதி யென்பர். சுருதி, அல்கு, மாத்திரை என்பன ஒரு பொருட் சொற்கள். ஏழிசை களிலும் அமைந்த சுருதிகளின் தொகை இருப திரண்டு, நுண்ணிய இசைக் கூறுபாடுகளாகிய இச் சுருதிகள் நான்கு கூடி நிற்பது முற்றிசை எனப்படும். இது ஒரலகும் மூவலகும் என இரண்டாய்ப் பிரிந்த நிலேயில் ஒரலகினேக் குற்றிசை யெனவும், மூவல கினேப் பற்றிசை எனவும் கொள்ளலாம். ஓரலகாகிய குற்றிசை இரண்டு கூடி நிற்பது நெட்டிசை யெனப் படும். பற்றிசையாகிய மூன்று சுருதியிலிருந்து குற்றிசை யாகிய ஒரு சுருதியை நீக்கினுல் எஞ்சிநின்ற இரு சுருதி