பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 57.7

சுருதிகளேப் பெறுவன என்பது நன்கு புலகுைம். இங்குக் குறித்த சுருதிகளின் பகுப்பு முறையினே,

' குரல்துத்தம் நான்கு, கிளே மூன்று, இரண்டாம்

குரையா உழை, இளி நான்கு-விரையா விளரியெனின் மூன்று, இரண்டு தாரமெனச்

சொன்னுள் களரிசேர் கண்ணுற்றவர் ’ எனச் சிலப்பதிகாரவுரையில் மேற்கோளாக வரும் பாடல் நன்கு புலப்படுத்தும். இதனை ஊன்றி நோக் குங்கால், இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளே, உழை என்னும் ஏழிசைகளுக்கு அமைந்த சுருதிப்பகுப்பும், இக் காலத்தில் சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படும் ஏழிசைகளுக்க ைமந்த சுருதிப்பகுப்பும் ஒரு நிரலேயே குறிக்கும் என்பது நன்கு தெளியப்படும்.

குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோசையிலும் அமரோசையிலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பா லே நி லே எனப்படும். அவ்வாறு நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன் என்ப வற்றை அறிந்து இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தினே ஆளத்தி செய்து பாடுதல் பண்ணுநிலை எனப்படும். மேற்செம்பாலே, செம்பால, படுமலேப்பாலே, செவ்வழிப்பாலே, அரும்பாலே, கோடிப் பாலே, விளரிப்பாலை என வரும் ஏழ்பெரும்பாலேகளும், - 1. மேற்செம்பாலேயினே மேச கல்யாணி எனவும், செம் பாலையினே அரிகாம் போதி எனவும், படும&லப்பாலே யினே நட பைரவி எனவும், செவ்வழிப்பாலேயினேச் சுத்ததோடி எனவும், அரும்பாலேயினேத் தீரசங்கரா பரணம் எனவும், கோடிப்பாலேயினேக் கரகரப்பிரியா எனவும், விளரிப்பாலேயினே அநுமத்தோடி எனவும் கொள்வர் யாழ் நூலார்.