பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 60 i

களுக்குரியனவாகப் பிற்காலத்தார் மேற்கொண்டு பாடிவரும் இராகங்களைப் பற்றி நாரத சங்கீத மகரந்தம், சதுர் தண்டிப் பிரகாசிகை முதலிய வட மொழி யிசைநூல்களிற் காணப்படும் இசைய ைமதி யையும் அருள் மிகு விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் தேவார இயலில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். தென் ட்ைடு இசைத்துறையில் ஷட்ஜம், சுத்தரிஷபம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பிரதி மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம், காகலி நிஷாதம் என வழங்கும் பன்னிரண்டு இசை நிலேகளும் முறையே ச, ர, ரி, க, கி, ம, மி, ப, த, தி, ந, நி என்னும் குறியீட்டெழுத்துக்களால் யாழ் நூலிற் குறிப்பிடப்பட்டன. யாழ்நூ லாசிரியர் கூறிய விளக்கங்களே அடியொற்றித் தேவாரப் பண்களைப் பற்றி அறிந்துகொள்ளத்தக்க குறிப்புக்களை ஈண்டு ஒரு சிறிது தொகுத்து நோக்குதல் இன்றியமையாததாகும்.

13. செவ்வழி

முல் லேப் பெரும்பண்ணுய், நூற்றுமூன்று என்னும் பண் வரிசையில் 13 என்னும் எண் பெற்றது செவ்வழி என்ற பண்ணுகும். இரண்டா ந் தி ரு மு ைற யி ல் 113 முதல் 122 வரையுள்ள பதிகங்கள் செவ்வழிப் பண்ணுக்கு உரியன. இது மாலேப்பொழுதிற் பாடுதற் குரியதென்பது முன் னர் விளக்கப்பெற்றது. கிரம வழக்கு வீழ்ந்த இடைக்காலத்தில் இவ்வரையறை மாறியதும் உண்டு. சேக்கிழாரடிகள்,

  • மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணுக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமைகொள விடுந்தானம் ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசை பெருக க் கூறிய பட்டடைக் குரலாங் கோடிப்பாலேயின் நிறுத்தி ”

(பெரிய-ஆனயர்-25)