பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 603

யெனக் கொள்ளலாம். காகலி அந்தரங்களோடு கூடிய நிலையில் அது மேசகல்யாணி மேளத்திற்கு ஒப்பாகும். *மபத நிசரீக’ என்ற நிரலில் பஞ்சம ரிஷபங்கள் நீங்கு தல், சரிகமப த நி என்ற நிரலில் ரிஷபதைவதங்கள் நீங்குதலாகும். ஆதலால் கிமிபநி - நிதியமிகிரி என ஒளடவ சம்பூரணமாக இப்பண்ணின் உருவத்தைக் கொள்ளலாம் என்பர் யாழ் நூலாசிரியர். தக்கராகப் பதிகங்களைக் கன்னட காம்போதியிலும், காம்போதி யிலும் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

21. புறநீர்மை (நேர்திறம்)

இது பாலேயாழ்த்திறங்களுள் நேர் திறம்” என்ப தன் அகநிலையாய்ப் பண்வரிசையில் 21 என்னும் எண் பெற்றது. இப்பண் மூன்ருந் திருமுறையில் 118 முதல் 128 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 83 முதல் 85 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. இது விடியற்காலத்திற் பாடுதற் குரிய பண்ணென்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இதனே இக்காலத்தார் பூபாளம்’ என வழங்குவர். புற நீர்மைப் பதிகங்கனைப் பூபாளத்திலன்றி ரீகண்டி என்ற இராகத்திலும் பாடும் வழக்கம் பிற்காலத்தில் இருந்ததென்பது திருவாவடுதுறையாதீன ஏட்டுச் சுவ டியிற்கண்ட குறிப்பிற்ை புலம்ை.

25. Lor Lວເຂໍາ

பாலேப்பெரும் பண்ணின் உறுப்பு’ என்னுந் திறக் தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 25 என்ற எண் பெற்றது. இப்பண் மூன்ருந் திருமுறையில் 56 முதல் 6ே வரையுள்ள பதிகங்களிலும், ஏழசந்திருமுறையில் 97 மூதல் 100 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தி யுள்ளது.