பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 6. 9

  • குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்

வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும் ”

(இந்திர - 35-81

என வரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது விளங் கும். இசையின் இனிமையைப் பெருக்கிக் காட்டும் இசைக்கருவிகளுள் குழலும் யாழுமே தனிச் சிறப்புடை யன என்பது ' குழலினி தியாழினிதென்ப ’ என வரும் திருக்குறளால் நன்கு புலனம்.

அடர்ந்து வளர்ந்த மூங்கிற் காடுகளில் வண்டுகள் மூங்கிலில் துளே செய்ய, அத்துளேகளின் வழியே காற்றுப்புகுந்து இயங்க, அதனுல் உளதாகிய ஓசை, கேட்போர் செவிக்கு ஒருவகை இன்பத்தை அளித்தது. அதன் இனிமையை யுணர்ந்த மக்கள், அதுபோன்ற தோர் இன்னேசையைத் தாமும் இசைத்து மகிழ விரும்பிச் சிறிய மூங்கிற் கோலை வெட்டியெடுத்து, அதன் மேற் பல துளைகளே அளவுபெறச் செய்து முதன் முதல் அமைத்துக்கொண்ட துளேக்கருவி குழல்’ என்ப தாகும். இது புறத்தே வயிரமுடைய புல் வகையாகிய மூங்கிலிற் செய்யப்பெற்றமையால் வேய்ங்குழல் எனவும் புல்லாங்குழல் எ ன வ ம் வழங்கப்பெறுவதாயிற்று. இது முற்காலத்தில் மூங்கிலிலும் சந்தனம், கருங் காலி, செங்காலி என்ற மரங்களிலும் வெண்கலத்திலும் அமைக்கப்பட்டது. மூங்கிலிற் செய்வது உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம் என்பர்.

குழலின் நீளம் இருபது விரல்; சுற்றளவு நாலரை விரல். துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரன் நிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணேசு பண்ணி இடமுகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப் படும்.இருபது விரலளவுள்ள இக்குழலில் துாம்புமுகத்தில் இருவிரல் நீக்கி, முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வன்