பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630

பன்னிரு திருமுறை வரலாறு


தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ்

கொண்டும் ” £4–104-7] * கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக்

கொண்ட தொண்டரை ’’ [5–9-1}

என வரும் தொடர்கள், இசை நிகழ்ச்சிக்கும் ஆடலுக் கும் தாளம் இன்றியமையாத தென்பதனேப் புலப்படுத் துவன. உமையம்மையாரளித்த ஞானப்பாலேப் பருகிச் சிவஞானம் கைவரப்பெற்ற ஆளுடைய பிள்ளே யார், திருக்கோலக்காவையடைந்து தம் மெல்லிய திருக் கைகளினல் தாளமிட்டுத் திருப்பதிகம் பாடியபொழுது இறைவன் பிள்ளையாருடைய மெல்லிய கைகள் வருந்தாவண்ணம் திருவைந்தெழுத்தெழுதப் பெற்ற இனிய ஓசையமைந்த அழகிய செம்பொன் லைாகிய தாளத்தினேக் கொடுத்தருளினுன் என்ற செய்தி முன் னர் விளக்கப்பெற்றுள்ளது. இதனே,

  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்

ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும்

தன்மையாள&ன ’’ [7–62–8] எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்துப் போற்றி யுள்ளார்.

தேவாரத் திருப்பதிகங்களில் ஏழில்" (6-17-9, 7-6-7) தண்டு (2-94.6), துத் திரி (3-76-4) என்பன வும் இன்னிசைக்கருவிகளாகக் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் ஏழில் என்பது ஏழிசைகளேயும் இசைத்தற் குரிய ஏழு துளேகளேயுடைய துளைக் கருவியாகும். பெருவங்கியம் நாகசுரம் என்பன இவ்வகையைச் சார்ந்தன எனக் கருதுதல் பொருந்தும். தண்டு என்பது வீணேயைக் குறித்து வழங்கும் பெயர். துத்திரி என்பது ஊது கொம்பினே யொத்த துளைக்கருவி.