பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களின் தொகை 47

லின் நாலாயிரத்துத் தொளாயிரம் திருப்பதிகங்களிலும் நாற்பத்தொன் பதினுயிரம் பாடல்கள் உள்ளனவென் பது பெறப்படும். எனவே திருநாவுக்கரசர் கூற்ருயின என்ற பாடல் முதல் ஒருவரையுமல்லாது என்ற பாடல் ஈருக நாற்பத்தொன்பதினுயிரம் பாடலாகப் பதிகங் கூறினர் என த்திருமுறைகண்ட புராணத் தொடர்க் குப் பொருள்கொள்ளுதலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் நம்பியாண்டார் நம்பி யென்னும் இவ்விரு பெருமக்கள் கருத்துக்கும் ஏற்புடையதாகும். இவ்வாறே,

  • சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்

தேவர் புகழ் திருத்தோணிச் சிவஞர்பங்கில் பீடுடைய உமைமுலைப்பால் அருளாலுண்டு

பிஞ்ஞகனேச் சினவிடைமேற் பெருகக்கண்டு தோடுடைய செவியன் முதல் கல்லூரென்னும்

தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப் பாடினர் பதிகங்கள் பாவிலொன்ரும்

பதிஞருயிரமுளதாப் பகருமன்றே.

எனச் சம்பந்தர் பாடற்ருெகையினே க் குறிக்கும் திரு முறைகண்ட புராணச் செய்யுளுக்கும் உரைகொள்ளு தல் வேண்டும். இதன் கண் தோடுடைய செவியன்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் முதலாகக் கல்லூர்ப் பெருமனம் எனத் தொடங்கும் திருப்பதிகம் ஈருக உள்ள பதிகங்களைத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாடினரென வும், அவர் திருவாய் மலர்ந்தருளிய இத் திருப்பதிகங்களிலமைந்த பாடல்களின் தொகை பதி குருயிரமெனவும் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். 'பாவி லொன்ரும் பதினருயிரமுளதாப் பகருமன்றே? என்ற தொடரிற் சுட்டப்பட்ட பதினருயிரம் என்ற தொகை பதிகங்களேயன் றிப் பாடல்களையே குறித்து நின்றதென்பது பாவிலொன்ரும்பதிருையிரம் என வரும் விளக்கத்தால் இனிது பெறப்படும். ஆகவே திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் ஆயிரத் தறுநூறு எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.