பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற திருப்பாடலே முதலாகக் கொண்ட திருப்பிரம புரப்பதிகம் மொழிமாற்று' என்னும் சித்திர கவிக்கு மூல இலக்கியமாக அமைந்துளது. பதிகத்தின் முதற்கண் உள்ள இத் திருப்பாடல், *காடதுபதி, காரவம் அணிகலம், காலதனில் தூச்சிலம்பர் சுந்தரக் காதினில் தோடது அணிகுவர், வேடது உருவம், விசயற்கு வில்லும் கொடுப்பர், ( அவர் யாரெனின்) பீடது அணி மணிமாடப் பிரமபுரத்து அரர்? என இவ்வாறு மொழிகளே முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்ளும் முறையிற் பிள்ளே யாரால் அருளிச் செய்யப்பெற்றிருத்தல் காணலாம். இவ்வாறே இத் திருப்பதிகத்துள்ள எல்லாத் திருப்பாடல்களும் மொழி களே மாற்றிப் பொருள் கொள்ளும் நோக்கத்துடன் அருளிச் செய்யப் பெற்றமையால் இத் திருப்பதிகம் மொழிமாற்றுக்கு இலக்கியமாயிற்று,

ஒரு செய்யுளே முதலிலிருந்து வாசித்தாலும் அன்றி இறுதி தொடங்கி வாசித்தாலும் அதே செய்யுளாக அமையும்படி பொருளும் ஒசையும் ஒத்த எழுத்துக்களே திரலே பெற்ற செய்யுள் மாலே மாற்று’ என்னும் சித்திர கவியாகும். முன் வந்த சொல்லொடு கூடிய சீர்களா லாகிய முதலடியையே அதன் இறுதி தொடங்கி மாற்றிப் படிக்க, அதுவே இரண்டாமடியாக அமைவது இம்மாலே மாற்று என விளக்கு வார் வந்த சொற்சீர் மாலேமாற்று' என்ருர். இதன் இயல்பு முன்னர் விளக் கப்பட்டது. மூன் ருந் திருமுறையில் 117-ஆவதாக அமைந்த யாமாமா நீ என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகம் ஆளுடைய பிள்ளேயார் அருளிய மாலே மாற்ருகும்.

ஒரு பாடலில் அடிமுதற் சீரின் இரண்டா மெழுத்து அப்பாடலிற் பின்வரும் சீர்கள் தோறும் ஒன்றி வழி

1. இந்நூல் பக்கம் 500,