பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற பாடலே முதலாக வுடைய திருப்பதிகமாகும். இப்பதிகப்பாடல்கள் யாவும். திருக்கயிலாயம், திரு. வானேக்கா, திருமயேந்திரம், திருவாரூர் ஆகிய நான்கு தலங்களேயும் தனித்தனியே குறித்துப் போற்று முகத்தால் அவை நான்கும் ஒருங்கே கூடிய சதுக்கம் போன்று அமைந்திருத்தலால் இ ப் ப தி க ம் கூடற் சதுக்கம் என்னும் பெயர்த்தாயிற்று.

செய்யுட்களின் முதலிலும் இறுதியிலும் நிற்கும் மொழிகள் தம்முட் பொருள் நோக்க முடையனவாய் இயைந்து நிற்கும் நிலையினேப் பூட்டுவிற் பொருள் கோள்’ என்பர்.

அலர்மகள் மலிதா அவனியில் நிகழ்பவர்

மலர்மலி குழலுமை தனேயிட மகிழ்பவர்

நலமலி யுருவுடை யவர் நகர் மிகுபுகழ்

நிலமலி மிழலையை நினேயவல்லவரே' என முதற் திருமுறையில் 124-ஆம் எண்பெற்று நின்ற திருப்பதிகத்தின் முதற் பத்துப் பாடல்களும் பூட்டுவிற் பொருள் கோளில் அமைந்திருத்தல் காணலாம். மேற் காட்டிய பாடலில் "மிழலேயை நினேய வல்லவர் என வரும் இறுதித் தொடரை அலர் மகள் மலி தர அவனி யில் நிகழ்டவர் என முதலடியுடன் இயைத்து நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

ஆளுடைய பிள்ளேயார் அருளிய திருப்பதிகங் களின் சொற்பொருள் முறையினே க் கூர்ந்து நோக்குங் கால் அப்பதிகங்களேப் பின் வருமாறு வகைப்படுத்திக் கொள்ள லாம். --

1. பிள்ளே யார், உலக மக்களே உய்விக்கும் அருட் குறிப்புடன் அவர்களே நோக்கி நீவிர் நும் துயரங்கள் நீங்க அம்மையப்பணுகிய இறைவனே அன்பில்ை தொழுது உய்வீராக’ என அறிவுறுத்தும் முறையில் பல திருப்பதிகங்களே அருளிச் செய்துள்ளார்.