பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் む63

  • பெண்ணுரு ஆணுரு வல்லாப் பிரமபுர நகர் மேய

அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகை

வகையாலே நண்ணிய ஞானசம்பந்தன் நவின் றன. பத்தும் வல்லார்கள் விண்ணவ ரோடினிதாக வீற்றிருப்பாரவர் தாமே

[2-65-11]

என வரும் இதன் திருக்கடைக் காப்பால் இனிது புலணு தல் காணலாம். இத்திருப்பதிகப் பொருளே அடி யொற்றி இறைவனது சொரூப இலக்கண த் தினே யுணர்த்துவது,

" சிவன் அருவுருவு மல்லன் சித்தினே. டசித்து மல்லன்

பவ முதல் தொழில்க ளொன்றும் பண்ணிடு வானுமல்லன் தவமுதல் யோக போகந் தரிப்பவனல்லன் தானே இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா

இயல்பிஞனே ? (சித்தியார்-சுபக்கம்.89) என வரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.

18. காழிப் பிள்ளேயார் தம்மை ஆட்கொண் டருளிய இறைவனே நோக்கிக் குறையிரந்து வேண்டும் நிலையில் முன் னிலைப் பரவலாகப் பல பதிகங்களைப் பாடிப் போற்றியுள்ளார்.

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந்து வெய்ய சொல்லேயாறித் தூய்மை செய்து காமவினே யகற்றி நல்லவாறே யுன்றன் நாமம் நாவில் தவின்றேத்த வல்லவாறே வந்து நல்காய் வலிவல மேயவனே ’

{ 1-50-1} என வும்,

1. இப்பதிகத்திற்கு இதுவே பொருள் என்பதனைச் சிவஞான சித்தியார் சுபக்கம் 89-ஆம் விருத்தத்தின் உரை யில் மறைஞான தேசிகர் இத்திருப்பாடலைப் பிரமாணமாக எடுத்துக்காட்டினமையால் நன்கு தெளியலாம்.