பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 667

ஆரூர் தொழுதுய்யலாம் மையல்கொண்

டஞ்சல்நெஞ்சே ” I2–79-1] எனவும்,

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம்

மனத்தார் திங்கட் கண்ணியர் என்றென்று காதலாளர் கைதொழுதேத்த

இருந்த ஆராம் விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலே

சுலாவி யெங்கும் பண்ணியல் பாடலருத ஆவூர்ப் பசுபதி யீச்சரம்

பாடுநா வே . [1–8-1} எனவும் வரும் திருப்பதிகங்கள் இவ்வகையைச் சார்ந்தன.

21. உமையம்மையார் அளித்த ஞானப்பா லடி சிலப்பருகிச் சிவஞான சம்பந்தராகிய கவுணியப் பிள்ளையார், தன்னேரில் லாத் தலைவனகிய இறைவன் மாதொரு பாகனக விடைமீது எழுந்தருளக் கண்டு, அப்பெருமானது திருவருள் வனப்பில் தமது உள்ளத் தைப் பறிகொடுத்து, உள்ளங்கவர் கள் வகிைய இறைவனே நாயகனுகவும், ஆன்மாவாகிய தம்மை அவனருள் விழைந்த தலைவியாகவும் கொண்டு, தாம் பெற்ற சிவா நுபவமாகிய காதலின் பத்தினே. த் தமி ழுக்கேயுரிய இனிய அகப்பொருட்டுறையில் வைத்து உணர்த்தும் முறையில் தோடுடைய செவியன் என்னும் திருப்பதிகத்தினே அருளிச் செய்தமை முன்னர்க் கூறப்பட்டது. பிள்ளை யாரால் முதன் முதற் பாடப்பெற்ற இத் திருப்பதிகப் பொருளேக் கூர்ந்து நோக்குங்கால், சிறிய பெருந்தகையாராய அவர் அருளிய திருப்பதிகங்களில் அருந்தமிழின் பொருள் ' ஆகிய அகப்பொருட்டுறையமைதி சிறப்பிடம் பெற்றி குத்தல் இனிது புலனுகும்.