பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 674

'வருந்திய மாதவத்தோர் வானேர் ஏளுேர் வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூசம் ஆடியுலகம் பொலிவெய்தத் திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில் பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீ ரே? 2-56-5; எனவும் வரும் பாடல்களில் திருவிடைமருதில் பூச தீர்த்தமாகிய காவிரித்துறையையும்,

"மடலார்ந்த தெங்கின் மயிலேயார் மாசிக்

கடலாட்டுக் கண் டான் கபாலீச் சரமமர்ந்தான் அடலானே றுாரும் அடிகளடி பரவி நடமாடல் காணுதே போதியோ பூம்பாவாய் (2-47-6) என மயிலாப்பூரில் மக தீர்த்தமாகிய கடலாட்டினேயும் பிள்ளே யார் குறித்துப் போற்றியிருத்தல் இவண்கருதத் தகுவதாகும்.

வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க”த் திரு அவதாரஞ் செய்தருளியவர் திருஞான சம்பந்தர் பிள்ளேயார் அருளிய திருப்பதிகங்களில் வேதச் சிறப்பும், வேதங்களில் விதிக்கப் பெற்றுள்ள வேள்விகளின் நற்பயனும், வேத நெறிப்படி நாடோறும் மேற்கொள்ளுதற்குரிய நியமங்களில் தவருது வேள்வி பல புரிந்து சிவபரம்பொருளே இடையருது தியானித்துப் போற்றும் நான் மறை யந்தனர் களின் மாண் பும் நன்கு விரித்துரைக்கப் பெற்றுள்ளன

உலகியல் ஒழுகலாறுகளே விரித்துரைக்கும் நால் வேதங்களின் வழி யொழுகுதலாகிய வேத நெறியை வைதிகம்' எனவும், வேதத்தின் முடிபுகளாகிய உப நிடதங்கள், கடவுள் வழிபாட்டிற்கு இன்றியமையாத ஆகமங்கள் ஆகிய மெய்ந் நூல்களே ச் சிறப்பு முறையில் மேற்கொண்டொழுகும் சிவநெறியினேச் சைவம்' என வும் வழங்குவர் ச | ன் ருே ர். இந் நிலவுலகில் வாழ்வார்க்குரிய பொதுநெறியாகிய வைதிகம் சிறப்பு