பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674

பன்னிரு திருமுறை வரலாறு


தோடுடைய செவியன் முதலிய திருப்பதிகங்களே அருளிச் செய்தார் என்பது,

மறை வளருந் தமிழ் மாலே " (2-67–11) மறையிலங்கு தமிழ் ? (1–6 1–1 i ) என வரும் திருக்கடைக் காப்பாலும்,

  • வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான் ’ எனச் சேக்கிழாரடிகள் ஆளுடைய பிள்ளையாரைப் போற்றுதலாலும் நன்கு விளங்கும்.

வேதம் ஒருவராலும் செய்யப்படாத தொன்னு ல் எனக் கூறுவர். உலக மக்கள் வினே த்தொடர்பு நீங்கி உய்தி பெற வேண்டும் என்னும் பேரருளால் விருப்பு வெறுப்பற்ற பெருமக்களாகிய முனிவர் முதலியோர் வாயிலாக எல்லாம் வல்ல இறைவனல் அருளிச் செய்யப் பெற்றனவே வேதம், ஆறங்கம், ஆகமம் முதலிய மெய்ந் நூல்கள் என்பது முன்னே ச் சான் ருேர் துணிபாகும். இக் கருத்தின,

“ விழையாருள்ளம் நன்கெழு நாவின் வினே கெட

வேதம் ஆறங்கம் பிழையா வண்ணம் பண்ணியவாற்ருற்

பெரியோரேத்தும் பெருமான் ? [1–42–7] என்ற பாடலில் ஆளுடையபிள்ளையார் அருளிச் செய் துள்ளமை காணலாம். வினேயின் நீங்கி விளங்கிய அறிவின் முனேவகிய இறைவனல் அருளிச்செய்யப் பெற்ற மெய்ந்நூல்கள் என்ற கருத்திலேயே முன்னேர் கள் வேதங்களேச் சிறப்பித்துப் போற்றியுள்ளார்கள்.

பெரிதும் ஆராயப்பட்ட நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது (சிவபெருமானது) வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையே மேவிய நான்கு கூற்றை

1. வேதத்தின் ஆறங்கங்களாவன :-வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம், சிக்கை, கற்பம் என்பன.