பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688

பன்னிரு திருமுறை வரலாறு


உலகில் வழங்கும் சமய நெறிகள் எல்லாவற்றிற்கும் புகலிடமாய் விளங்கும் தனிமுதல்வன் இறைவன் ஒரு வனே என்பதும், உயிர்க்குயிராய் விளங்கும் அம் முதல் வன், அறிவினல் மிக்க சமய நெறிகள் எல்லாவற்றுக் கும் ஆதாரமாக மெய்ம்மையான ஒழுக்க நெறியினை வகுத்தருளி உலகங்களே யெல்லாம் தத்தம் ஒழுங்கு முறையிற் பிறழாதவாறு நிலைபெறச் செய்கின்றன் என்பதும்,

' ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின் தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் ’’

[1-11–5] என வரும் பிள்ளேயார் வாய்மொழியால் நன்கு விளங் கும். இங்ங்னம் எல்லாச் சமய நெறிகளையும் தோற்று வித்தற்குக் காரணணுகிய முதல்வன், அம்மையப்ப ளுக விள்ங்கும் தனது உண்மை நிலையினே மக்கள் உணர்ந்து அடைந்து உய்தி பெறுதற்கியலாத நிலையில் சமணம் புத்தம் ஆகிய புறச் சமயங்களேத் தோற்று வித்ததன் நோக்கம் எதுவோ' என அன்பின் மிக்க அடியார்களே நோக்கி வினவும் முறையில்,

துனே நன்மலர் தூய்த்தொழு தொண்டர் காள்

சொல்லீர் பணே நன்முலேப் பார்ப்பதி யோடுடனகி இணையில் இரும்பூளே யிடங்கொண்ட ஈசன் அனேவில் சமண் சாக்கியம் ஆக்கிய வாறே

/2-36一莓 என வரும் திருப்பாடலில் அருளிச் செய்துள்ளார். மக்களது உணர்வின் எல்லே நோக்கியும் படிகால் முறையாக மக்கள் பெறவேண்டிய மனவளர்ச்சி நோக் யும் இச்சமயங்கள் இறைவனருளால் தக்க தலைவர் களேக் கொண்டு தோற்றுவிக்கப்பெற்றன என்னும் உண்மை இத் திருப்பாடலிற் குறிப்பாக அறிவுறுத்தப் பெற்றுள்ளமை அறியத்தக்கதாகும்.