பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 705

கூறும் நாளாம்’ என ஆமீற்றில் வைத்துக் கூறும் பதிகங்களும், இறைவனது ஒப்புயர்வற்ற தன்மைகளே எடுத்துரைத்துப் போற்றும் முறையில், சூலப் படை யுடையார் தாமே போலும், சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும் என ஒப்பில் போலியாற் செப்பும் திருப்பதிகங்களும், தாம் கண்ட கடவுட் காட்சியை ஏனேயோரும் உணர்ந்து உய்திபெறும் முறையில் தமது அனுபவத்தை விளக்கி வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்' என்றும், வாய்மூர் அடிகளேயான் கண்ட வாறே என்றும், புண்ணியனேப் பூந்துருத்திக் கண் டேன் நானே, கற்பகத்தைக் கண்ணுரக் கண்டேன் நானே' என்றும், செங்காட்டங்குடிய தனிற் கண்டேன் நானே' என்றும் கூறும் பதிகங்களும், தாம்கண்ட அத் தெய்வக் காட்சியை ஏனையோரும் காணவேண்டும் என்னும் பெருவேட்கையால், நாகைக் காரோணத்து எஞ் சான்றும் காணலாமே என்றும், காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன் ருப்பூர் நடுதறி யைக் காணலாமே என்றும் எல்லாம் வல்ல இறை வனைப் புறத்தும் அகத்தும் காணும் ந்ெறியினே அறி வுறுத்தும் பதிகங்களும் ஆருந் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இறைவனே இடைவிடாது நினேந்து போற்றுதலால், கருத்திற்குச் சேயனுக விளங்கும் அப் பெருமான் என்னுடைய எளிய நெஞ்சத்திலும் நீங்காது எழுந்தருளியுள்ளான்” என அகமகிழ்ந்து போற்றும் வகையில் ஏகம்பன் காண் , அவனென் எண்ணத்தானே' என்றும் திருப்புத்துரில் திருத்தளி யான் காண், அவனென் சிந்தையானே' என்றும். *திருமுண்டிச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே' என்றும் அறிவுறுத்தும் பதிகங் களும், தாம் கண்ட கடவுட் காட்சி தம் கண்ணெதிரே நீங்காது நின்ற திறத்தை விளக்கும் முறையில்