பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708

பன்னிரு திருமுறை வரலாறு


துய்ந்தேனே என்றும்வரும் பதிகங்களும், தம்மை யாட்கொண்ட இறைவனைச் செல்வன்' என்றும், 'மனளன்’ என்றும் மகிழ்ந்து போற்றும் பதிகங்களும், தீவினை முதலிய இடையூறுகளே நோக்கி, அடியார் களய எம்மை விட்டு விலகுமின் என அறிவுறுத்தும் பதிகங்களும், இறைவனைக்குறித்து வினவும் விடைய மாக அமைந்த திருப்பாடல்களும், அப்பரருளிய திருத் த ண் - க த் தொகுதியாகிய ஆருந்திருமுறையில் அமைந்திருத்தல் காணலாம்.

இறைவனது திருவருட்பெருமையினையும், உயிர் களின் சிறுமையினையும் உலகமக்களுக்கு விளங்க எடுத் துரைக்கு முகமாக மக்களுடைய ம ன ம சு. க ளே ப் போக்கி இறைவனது திருவருள் இன்பத்தில் அன்பர் களேத் திளேக்கவைக்கும் பேராற்றல் மிக்க செழும் பாடல்களாக நாவரசரருளிய திருப்பதிகங்கள் திகழ்தல் கான லாம்.

அப்பரடிகள் ஆண்டானகிய இறைவனைத் தலைவ ஞகவும் அவனது பேரருள் இன்பத்தை விரும்பி நிற்கும் ஆருயிராகிய தம்மைத் தலைவியாகவும் கருதிய நிலையில் அகப்பொருள் துறையில் அருளிய திருப்பதிகங்கள், "அவனே தானேயாகிய நெறியில் அடிகள் பெற்ற சிவானுபவத்தை இ னி து புலப்படுத்துவனவாகும். அடிகளார் கனவிலும் நனவிலும் தாம் இறைவனைத் தலைப்பட்டு நுகர்ந்த திருவருள் அனுபவத்தை நற்ருய் கூற்ருகவும் செவிலித்தாய் கூற்ருகவும் புலப்படுத்திய திருப்பாடல்கள், புணர்ந்துழி உவகையும், பிரிவுழிக் கலக்கமும்’ ஆகிய இரு திறத்தையும் விளக்குவன வாக உள்ளன. திருநாவுக்கரசர், நம்பர் அருளாமையில்ை சமண சமயத்தைச் சார் தற்கு முன்னரும், இறைவ ரருளிய சூலேநோயால் துன்புற்றுச் சமணந்துறந்து திருநாவுக்கரசராகிய பின்னரும், சிவபெருமான நாள்