பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720

பன்னிரு திருமுறை வரலாறு


சிறிய குடிசை ஒன்றினே அமைக்கவேண்டுமானல், கால்களை நட்டு, இருபக்கத்தும் பக்கவாரைகளாகிய கைகளே ஏற்றி, அவற்றின் மேல் சார்த்துக்கழிகளே வரிந்து கட்டி, அதன் மேல் ஒல்ே முதலியவற்றை வேய்ந்து, ஓரங்களில் ம ண் னே க் குழைத்துச் சுவரெடுத்து, நுழைவாயிலும் புழைக்கடைவாயிலும் என இரண்டு வாசல்களே வகுத்துப் பக்கங்களில் காற்றுப் புகுந்து இயங்கக் கால தர்களே (சன்னல்களே) அமைத்துக் கண்டோர் யாவரும் விரும்பித் தங்குதற் கேற்ற கவர்ச்சியுடையதாய்ச் செய்து முடித்தல் இயல்பு. இங்ங்னமே அருளாளனுகிய இறைவனும் உயிர்களாகிய நாம் விரும்பித் தங்கு தற்கேற்ற கவர்ச்சி புடையதாக மக்கள் யாக்கையாகிய இவ்வுடம்பை நமக்குப் படைத்து வழங்கியுள்ளான். இதனே, * கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி

மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத்தா வமைத்தங் கேழு சாலேகம்பண்ணி

மால்கொடுத் தாவிவைத்தார் ம. மறைக்காடகுரே '

(4-83–4)

என வரும் திருநேரிசையில் அப்பரடிகள் சுவைபொருந்த விரித்துரைத்துள்ளார். இங்ங்னம் உயிர்களுக்கென அமைத்த யாக்கையாகிய இவ்வில்லம், உயிர்மட்டுமே நிலையாய்த் தங்கு தற்கேற்ற சொந்த வீடாக அமையா மல், ஐம்பொறிகள் தங்கு தற்குரிய உரிமையிடமாகவும் அவ்வைம் பொறிகளுக்கிடையே உயிர் ஒதுக்குக் குடி யிருக்கவேண்டிய துச்சிலாகவும் அமைந்து, உயிர் வாழ்வுக்குப் பல்வகைத் துன்பங்களேயும் விளேப்பு தாயினும், இக்குடிசையிற் புக்க உயிரானது இதனே விட்டு மீள விரும்பாததொரு கவர்ச்சியினே இதற்கு உண்டாக்கி, இக்குடிசையில் உயிர்களே இறைவன் குடியேற்றின்ை என்பார், மால்கொடுத்துஆவி வைத் தார் மாமறைக் காடனரே என்ருர். இவ்வாறே ஞான சம்பந்தரும்,