பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 723

தலையான அப்பெருமக்களே வாழ்த்தி வணங்குதலே மகிழ்வளிப்பதெனத் தெளிந்த அப்பரடிகள், சிவனடி பார்களின் பெருமையினேப் பல பாடல்களிலும் பாராட்டிப் போற்றியுள்ளார்.

  • வானந்துளங்கி லென் மண் கம்ப மாகிலென்

மால்வரையும் தானந் துளங்கித் த&லதடுமாறிலென் தண்கடலம் மீன் ம்படிலென் விரிசுடர் வீழிலென் வேலே நஞ்சுண்டு ஊனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட

உத்தமர்க்கே ’ {4–112–8]

என வரும் திருவிருத்தம் இறைவனுக்கு ஆட்பட்ட பெருமக்களாகிய அடியார்களின் உள்ளத்துறுதியைப் புலப்படுத்தில் காணலாம்.

சிவனடியார்கள், 'வருந்துணேயும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்தடக்கி, மடவாரோடும் பொருந்து அனேமேல் வரும் பயகுகிய போகத்தை? அறவே துறந்து போந்து திருமடத்தில் தங்கியிருந்து சிவபரம் பொருளே இடைவிடாது சிந்தித்துப் போற்றும் நல்லியல்புடையராவர். ஆதலின் அவர்கள் உள்ளத் திலே இறைவன் என்றும் எழுந்தருளியுள்ளான் என்பதனே,

மடமன்னும் அடியார்தம் மனத்தினுள்ளார் (6.10.6; என்ற தொடரில் அப்பரடிகள் அறிவுறுத்தியுள்ளார். இங்ங்னம் திருநீறும் கண்டிகையும் பூண்டு இறைவனே இடைவிடாது போற்றும் மெய்யடியார்களே இறைவ ஒகவே மதித்து, அன்னேர் பிறந்த குலம் முதலிய வற்றின் உயர்வு தாழ்வைக் கருதாமல் வழிபடும் அன் புடையார் உள் ளத்திலே, காணுதற்கரிய பெருமானேக் கண்டு மகிழலாம் என்பது அப்பாடிகள் கண்டுணர்ந்த திருவருள துபவமாகும்.