பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726

பன்னிரு திருமுறை வரலாறு


என வரும் திருப்பாடலில் ஞானசம்பந்தப் பிள்ளே யார் அறிவுறுத்தி யுள்ளமை இங்கு நோக்கத் தக்கதாகும்.

திருநாவுக்கரசர், தம் காலத்திற்கு முன் தோன்றிய சண்டேசர், கண்ணப்பர், கணம் புல்லர், அமர் நீதி நாயனுர், சாக்கிய நாயனுர், கோச்செங்கட் சோழர் ஆகிய அடியார்களேயும், தம் காலத்தில் உடன் வாழ்ந்த நமிநந்தியடிகள்; அப்பூதியடிகள், திருஞான சம்பந்தர் ஆகிய பெருமக்களையும் தாம் பாடிய திருப்பதிகத்திற் குறித்துப் போற்றியுள்ளார். திருவாலங்காட்டுத் திருத் தாண்டகத்தில்,

பாவுற்ற பாடல் உகப்பார் தாமே ? s —78–3] பண்தான் இசைபாட நின் ருர் தாமே [6–78–6] செய்யாள் வழிபட நின்ருர் தாமே [6–78–7] சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே ! [6–78-10)

என வரும் தொடர்ப் பொருளேக் கூர்ந்து நோக்குங்கால் இத்தொடர்கள், அறவா நீ ஆடும்போது உன்னடி யின் கீழ் இருக்க' என இறைவனே வேண்டி, ஆலங் காட்டிறைவன் ஆட எடுத்தபெருஞ் சேவடிக்கீழ் என்றும் இருக்கின்ரு ராகிய காரைக்காலம்மையாரைக் குறித்தன எனக் கொள்ளுதல் பொருந்தும். இவ்வாறே,

  • வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும்

வாழ்த்துங் கேட்டு அணங்கும் பழையனூர் ஆலங்காட் டெம்மடிகளே !

{1–45–77

எனவருங் சம்பந்தர் தேவாரத் தொடர், காரைக்கா லம்மையாரைக் குறித்துப் போற்றும் முறையில் அமைந்திருத்தல் இங்கு ஒப்புநோக்கி யுணர்தற் குரியதாகும்.