பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ

6. ஆருரர் அருளிச் செயல்

திருஞானசம்பந்தர், திருந வக்கரசர் ஆகிய பெரு மக்கள் காலத்தையடுத்துத் தோன்றியவர் நம்பியா ரூரர் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. முன்னே இருவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடு அயல்வேந்தர் ஆட்சியிலும், புறச்சமயச் சூழ்ச்சியிலும் அகப்பட்டுத் தன் ஆற்றல் குன்றி இருந்தது. அருளாசிரியராகிய அப்பெருமக்கள் இருவரது நன் முயற்சியினுல் தமிழ் மக்கள் தம் உள்ளத்து அச்சம் நீங்கப்பெற்று வீறு கொண்டு எழுந்தனர். தமிழ்நாடெங்கும் பண்டுபோல் செந்தமிழும் சிவநெறியும் தழைத்தோங்கின. பல்லவர் முதலிய அயல் வேந்தரும் தமிழராகவும், சைவராகவு மாயினர். தமிழ் மூவேந்தரும் ஆற்றல் பெற்று விளங் கினர். தமிழ்மக்கள் பண்டுபோல் உரிமை வாழ்வு நடத்தினர். இவ்வாறு தமிழகம் அமைதியுற்ற காலத் தில் தோன்றியவர் நம்பியாரூரர் ஆதலால், அவரருளிய திருப்பதிகங்களில் சமணம், பெளத்தம் முதலிய புறச் சமயங்களைப் பற்றிய கண்டனங்களுக்கு இடம் ஏற்பட வில்லே. நல்லிசை ஞானசம்பந்தனும், நாவினுக்கரச சரும் பாடிய நற்றமிழ் மாலே சொல்வி பவே சொல்லி ஏத்துகப்பானே' என்னும் சுந்தரர் திருப்பாடலேக் கூர்ந்து நோக்குங்கால், இவர் தமக்கு முன்னர் வாழ்ந்த ஞானசம்பந்தர் நாவுக்கரசர் ஆகிய பெருமக்கள் இருவரும் அருளிய திருப்பதிகங்களே இடைவிடாது பாடிப் போற்றி இறைவனது உவப்பைப் பெற்றவர் என்பது நன்கு விளங்கும்.

இவரருளிய பதிகங்கள், திருஞானசம்பந்தப்பிள்ளே யார் அருளிய திருப்பதிகங்களேப் போன்று, تي يي کrr:#; குளிர்ந்தபோதெலாம் உகந்துகந்துபாடும் உவகைத் திறத்தையும், நாவுக்கரசருடைய திருப்பதிகங்களேப் போன்று தன் பிழை நினேந்து ஏசறும் இரங்க லுனர்