பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகப் பொருட்பாகுபாடு 755

' தோடு கூற்றுப் பித்தா மூன்றும்

பீடுடைத் தேசிகன் பேரருளாகும் நீற்றுப்பதிகம் நிகழ்த்துங் காலே மாற்றுப் பரையின் வரலாருகும், துஞ்சல் காதல் சொற்றுணே மூன்றும் அஞ்செழுத்துண்மை அருளிய தாகும், ஆரூர் தில்லே காட்டுர் மூன்றும் சீரார் கோயிற் றிறமையதாகும், ஒருரு வரிய பாளே வடிவே மருவார் என்ற வண்டமிழ் ஐந்தும் திருவார் மேனிச் செய்திய தாகும், பொடியுடை அர வனே அந்த ளைன் அடியினே தந்த அருளே யாகும், பந்து வேற்ரு கொன்றிவை மூன்றும் நந்தலில் அருச்சனே நாட்டிய தாகும், வேய் குலம் தில்லே எனுமிவை மூன்றும் நாயனும் அடிமையும் நாட்டிய தாகும் ; இப்பரி சகத்திய முனிவன் இருநிலத் தொப்பறு மூவர் ஒதுதே வாரம் முழுதையுஞ் சிவாலய முனிக்கறிவித்துப் பழுதிலா அவையுட் பரிந்தெடுத் திருபத் தைந்துயர் பதிகமும் அறிவுறத் திரட்டி எண்னரும் அடங்கல் யாவையும் உணரும் புண் ணியம் இவைகொடு பொருந்து மென்றவன் தனக்கருள் செய்தனன் தகவுற, அதனல் தீதிலா அகத்தியத் திரட்டினே யுலகில் ஒதினர் அடங்கலும் ஓதின ராவரே.

என வரும் ஆசிரியப்பாவாகும். இதனேக் கூர்ந்து நோக்குங்கால், மூவர் தேவாரத்திருப்பதிகங்கள் முழுவ தையும் மேற்குறித்த குருவருள் முதலிய எண் வகைப் பொருள் பற்றிப் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பண்டை யோர் ஆராய்ந்து கண்ட பொருள் நெறிமரபென்பது இனிது விளங்கும்.