பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 769

என வரும் தொடரில் குறிக்கப்பெற்றது இவ்வியல்பினே,

வேயுயர் சாரத் கருவிரலூகம் விளேயாடும்

சேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனர்'

{1-98-7)

என வரும் தேவ ரத் தொடரால் அறியலாம்.

மலேகளில் வாழும் யானே யை மலேப்பாம்பு விழுங்கு தல் உண்டு என்பது,

ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல் (நற்றினே 14)

என வரும் தொடராற் புலகுகும்.

இச் செய்தியைப்

பரியகளிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கரியமீடற்றர் செய்ய மேனிக் கயிலே மலேயாரே'

(1–58–2}

என்ற தொடரில் சம்பந்தர் குறித்தல் காணலாம்.

காட்டில் வாழும் யானே மூங்கிலே வளேத்துத் தழை உண்ணும் நிலையில், அதனல் விடப்பெற்ற மூங்கில், தூண்டிற்கோலேப் போன்று விரைந்து மேலெழும் திறத்தை,

" கான யானே கைவிடு பசுங்கழை

மீனெறி தூண்டிலின் நிவக்கும் (குறுந்தொகை 34)

என்ற தொடர் விளக்குகிறது. இங்ங்னம் மேலோங்கிய அம் மூங்கில், மழைமேகத்தைக் கீறியது என்பதுபட,

" தாளமர் வேய்தப்ேபற்றித் தாழ்கரிவிட்ட விசை போய்க்

காளமதார் முகில் கீறும் கற் குடி மாமலேயாரே

(1-43-8)