பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 77 ;

எனவும் வரும் திருப்பாடல்களாகும். இவை, பேதமை பொருளாகப் பிறந்த நகைச்சுவையினையும் மயக்கத் தால் ஏற்பட்ட மருட் ைகச்சுவையினே யும் புலப்படுத்து தல் காணலாம்.

  • நீலமேனி வாலிழை பாகத் து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே ’

என்பது ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலா கும். இப்பாடற்பொருளே அடியொற்றி அமைந்தது,

தண்கடல் சூழ் வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும் இயபர மாவன இன்னம்பரான் தன் இணே யடியே

[4–100–9] என வரும் திருவிருத்தமாகும்.

ஆதிரை முதல்வகிைய இறைவனுடைய திருக் கோயில்களில் வழிபாடு இயற்றும் அந்தணர்களே விரி நூல் அந்தணர் (11) எனப் பரிபாடல் கூறும். ஆக மங்களே உணர்ந்த பூசகர்களாகிய இப்பெருமக்களே 'முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்” எனத் திருத்தொண்டத்தொகையில் நம்பியாரூரர் போற்றியுள்ளார்.

உருளினர்க் கடம்பின் ஒலி தாரோயே (7) என முருகனைப் பரிபாடல் போற்றும். அப்பாடிகள் நங் கடம்பன்' எனப் போற்றினர்.

‘மணிமிடற்று எண்கையாய்' எனச் சிவபெரு மானைப் போற்றுவதாக அமைந்தது, கலித்தொகைக் கடவுள் வாழ்த்து. எண்தோள் வீ சீ நின் ருடும்பிரான்’ எனப்போற்றுவர் அப்பரடிகள்.