பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782

பன்னிரு திருமுறை வரலாறு


யிற் சக்தி எனவும் தாதான் மியத்தால் இரு திறப்பட்டு” உலகினே இயக்கி நிற்றல் பற்றி இறைவனை 'ஆதி பகவன்’ என்ற பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக்கருதுதல் பொருத்தும்.

'சத்தியுள் ஆதியோர் தையல்பங்கன்” (1.115–4]

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர், திரு வள்ளுவர் கூறிய ஆதிபகவன்’ என்னும் திருப்பெயர்க் குரிய விளக்கமாக அமைந்திருத்தல் இக்கருத்தினே வலியுறுத்துதல் காணலாம்.

இறைவன், சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருள் புரிகின் ருன் என்பது,

“எத்திறம் நின்றன் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்’

(சிவஞான சித்தியார் - சுபக் - 165) எனவும்,

  • சிவனெனும் போருளும் ஆதிசத்தியொடு

சேரின் எத்தொழிலும் வல்லதாம்’

|செளந்தரியல கரி.) என வும் வரும் ஆன் ருேர் உரைகளால் இனிதுன சப்

படும்.

வேதத்துள், அத்துவிதம் என்றது மன்றி ஏகம் எனவும் ஒற்றுமைப்பட ஓதுதலால், அதற்குமாருக உயிர்கள் பல என்றும் இறைவன் அவற்றுடன் ஒன்றி நிற்கின் ருன் என்றும் வேறுபடக்கூறுவதென்னே? என்னும் தடையினே நிகழ்த்திக்கொண்டு அதற்கு விடை கூறும் நிலேயில்,

ஒன்றென்ற தொன்றேகாண், ஒன்றே பதி, பசுவாம் ஒன்றென்ற நீபாசத்தோடுளே காண்-ஒன்றின் ருல் அக்கரங்கள் இன்ரும் அகசவுயிர் இன்றேல் இக்கிரமத் தென்னும் இருக்கு”