பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 பன்னிரு திருமுறை வரலாறு

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்

றைம்புலனும் அடக்கி ஞானப் புகலுடை யோர்தம் முள்ளப் புண்டரிகத்

துள்ளிருக்கும் புராணர் ’ | 1–132-6) எனவும்,

  • சுடர்க்கமலப் போதகஞ் சேர் புண்ணியனர் ’

{1–66–2) எனவும் வரும்தொடர்களில்ஞானசம்பந்தப்பிள்ளே யார் எடுத்தாண்டுள்ளார். இவ்வாறே திருநாவுக்கரசரும்,

  • நன்மலர்மேல் உறையாநின்ற அறநெறியை ’

[6-29–1] எனவும்,

நின்றபூமேல் எழுந்தருளியிருந்தானே ?

[6–84–1] எனவும்,

  • எரியாயதாமரைமேல் இயங்கிஞரும் [6–16–7]

எனவும்,

அடித்தாமரை மலர்மேல் வைத்தார் (6–21–1} எனவும்,

  • புண்டரிகப் புதுமலராதனத்தார் ? [6–53–8]

எனவும் வருந்தொடர்களில் எடுத்தாண்டுள்ளமை காண்க.

ஒரு பொருளே விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத வன் இறைவன் . எனவே அம்முதல்வனுக்கு வேண்டு தல் வேண்டாமையிலான் என்பதொரு பெயராயிற்று. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனகிய இறைவனது திருவடியைச் சேர்ந்த அடியார்க்கும் விருப்பு வெறுப்பு என்னும் குற்றங்கள் இல்லாதொழி தலால் அவை காரணமாக வரும் பிறவித்துன்பங்கள் எக்காலத்தும் உண்டாகா என்பார்,