பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 813

கூற்றம் சாற்றிய பெருமையும் என்ற தொடரில் தொல்காப்பியர் தெளிவாகக் குறித்துள்ளார். குறியில் வழுவாக் கொடுங்கூற்று" (7.93-10) என்ருர் நம்பியா ரூரரும். தவஞ்செய்யும் நற்சார்பிற் பழகி மெய்யுணர்வு பெற்ற தவச் செல்வர்கள், பொறிவழி போகாமல் தம் மன த்தை அடக்கியாளும் நோன்பின் ஆற்றலால், மாற்றருங் கூற்றத்தையும் வென்று இறவா நிலேபெற்று விளங்குவர் என்பது,

  • கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தப்ேபட் டவர் க்கு ’

என வரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டது. மாற் ஹருங் கூற்றம் என்னும் தொல்காப்பியத் தொடர்ப் பொருளேக் கூற்றங் குதித்தலுங் கைகூடும் என்ற தொடரில் எதிர்மறையும்மையால் குறிப்பாகப் புலப் படுத்தினர் திருவள்ளுவர். ஈண்டுக் குதித்தல் என்றது. தாண்டிக் கடத்தல் - தப்பி உய்தல் என்னும் பொரு ளது. மாற்றுதற்கரிய கூற்றுவனேயும் விலக்கும் ஆற்றல் பெற்ற பெருந்தவச் செல்வர்களாகிய சிவனடியார் களின் சிறப்பினே,

மதிய மெசய்த்தகதிர் போலொளிம்மணற் கானல்வாய்ப்

புதிய முத்தந்திகழ் பாதிரிப்புலியூரெனும் பதியில் வைக்கப்படும் எந்தைதன் பழந்தொண்டர்கள் குதியுங் கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே

[1-121-6]

என வரும் திருப்பாடலில் விரித்துரைப்பர் திருஞான சம்பந்தர். இத்திருப்பாடல் கூற்றங் குதித்தலுங் கைகூடும் என்னுந் தொடரின் சொற்பொருளே எடுத் தாண்டிருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

தவஞ்செய்வார்க்குத் தலே மயிரை மழித்தலும் சடையாக வளர்த்தலுமாகிய புறவேடங்களால் மட்