பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 827

ஊறிகு ரோசையுள் ஒன்றினர், ஒன்றிமால் கூறினர் அமர்தரும் குமரவேள் தாதையூர், ஆறினர் பொய்யுகத் தையுனர் வெய்திமெய் தேறினர் வழிபடு தென்குடித் திட்டையே (3.3.5-6)

என வரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடலாலும்,

  • கான நாடு கலந்து திரியிலென்

ஈனமின்றி யிருந்தவஞ் செய்யிலென் ஊனேயுண்ட லொழிந்து வானுேக்கிலென் ஞானனென்பவர்க்கன்றி நன்கில்ன்யே sā-99-6]

என வரும் பாவநாசத் திருக்குறுந் தொகையாலும் நன்கு தெளியப்படும். ஐயுணர் வெய்தப் பெற்றும் மெய் யுணர் வில்லாதார்க் குப் பயனில்லே என மெய்யுணர் வின் இன்றியமையாமையினே வற்புறுத்த வேண்டி எதிர்மறை வாய்பாட்டால் திருவள்ளுவர் கூறிய இத் தொடர்ப்பொருளே, தென் குடித் திட்டையில் சிவபெரு மானே வழிபடும் அடியார்களின் இயல்பில் வைத்து 'பொய் ஆறினர், அகத்து ஐயுணர்வு எய்தி மெய்தேறி குர்’ என உடன்பாட்டு முகத்தால் அறிவுறுத்திய திறம் நினேந்து இன்புறத்தக்கதாகும்.

  • தேறிசூர் சித்தத் திருந்தார் தாமே ’ [6-78-4] என வரும் திருத்தாண்டகத் தொடர் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கது.

நல்லொழுக்கமுடைய சான்ருேர் பால் உபதேச மொழிகளைக் கேட்டு அதனுல் மெய்ப்பொருளே யுணர்ந்து போற்றும் நல்லறிவாளர்கள் மீளவும் இப்பிற வியில் திரும்பி வாராமைக்கு ஏதுவாகிய பெருநெறி யாகிய வீட்டு நெறியைத் தலைப்படுவர் என்பது,

  • கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலேப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி என்பதல்ை உணர்த்தப்பட்டது. பிறப்பிலாப் பெரு நெறியாகிய வீடு பேற்றினே,