பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/854

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836

பன்னிரு திருமுறை வரலாறு


செல்வம் (241) என வும், செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம், செல்வத்து ளெல்லாந் தலே ' (4.11) என வும் முறையே எல்லாவுயிர்க ளிடத்தும்செல்வதாகிய கருனையின் யும் எல்லா நூற் பொருளேயும் அறிந்தோர் வாயிலாகக் கேட்டுணரும் கேள்வி யுணர்வினையும் சிறப்புடைய செல்வங்களாகக் குறித்துள்ளார்.

ஆரவார முடைய ஆணமொழிகளைக் கூறிப் பிறரை ஏவிப் பணிகொள்ளுதலும், மனத்தினும் விரைந்து செல்லும் ஊர்திகளே ஏறிச் செலுத்துதலும் உண்மையான செல்வங்களாக மாட்டா. அவை அவ ரவர் செய்த வினையின் பயன்களாகவே கொள்ளத் தக்கன. அறிவுடைய சான்றேர்களாற் செல்வம் என்று சிறப்பித்துப் பேசப்படுவது, தன்னே அடைந் தோர்களின் துன்பங்கண்டு அஞ்சி வருந்தி அத்துன்பத் தினேத் துடைத்தற்கு முந்தும் அருளுடைமையாகிய கருணேயேயாகும், இந் நுட்பம்,

நெடிய மொழிதலும் கடியவூர்தலும்

செல்வமன்று தம் செய்வினேப் பயனே சான்ருேர் செல்வமென்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் செல்வமென்பதுவே (குறுந்-)

என வரும் சங்கச் செய்யுளிற் புலப்படுத்தப் பெற்றது. இவ்வாறு பிறவுயிர்களின் துயர்கண்டு அஞ்சி அத்துய ரினே த் துடைக்க முற்படும் அருளாகிய பெருஞ்செல்வத் திற்கு நிலைக்களமாகத் திகழ்வோன் இறைவன் ஒரு வனே ஆதலின் அவனது திருவருட் பெருமையினே விரித்துரைக்கும் பொருள் சேர் புகழாகிய தோத்திரங் களே வாயாரப்பாடி மகிழ்தலும் அவற்றை அன்பர் சொல்லச் செவியாரக் கேட்டு மகிழ்தலும் சிறப்புடைய செல்வமாம் என்பதனே,