பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/858

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840

பன்னிரு திருமுறை வரலாறு


" அகண்மர்ந்த அன்பினராய் அறுபகைசெற்

றைம்புலனும் அடக்கி ஞானப்

புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்

துள்ளிருக்கும் புராணர் ' [1-132-6]

என வரும் திருப்பாடலில் ஞானசம்பந்தப்பிள்ளேயார் குறித்துள்ளார். இங்ஙனம் அகப்பகையாகிய குற்றங் களைக் களதற்கும் இறைவனது திருவருளேயே துணை காகக்கொண்டு முயலுதல் வேண்டும் என்பது,

வலேயம் வைத்த கூற்றமீவான் வந்துநின்ற வார்த்தை

கேட்டுச்

சிலேயமைத்த சிந்தையாலே திருவடிதொழுதுய்யினல்லால் கலேயமைத்த காடிச் செற்றக் குரோதலோப மதவருடை உலேயமைத்திங் கொன்றமாட்டேன் ஒன காத்தன்

தளியுளிரே (7:5-8)

என வரும் நம்பியாரூரர் வாய்மொழியால் நன்குணரப் படும்.

குணம், குற்றம் என்பவற்றுள் ஒன்றேயுடையார் உலகத்தில்லாமையால், ஒருவர்பால் அமைந்த குணங் களேயும் குற்றங்களேயும் ஒப்பவைத்து, ஆராய்து அவற் றின் மிகுதியையும் குறைவினையும் நோக்கிக் கண்டு, குணம் மிக்கதாயின் அவரைச் செய்தொழிற் குரிய ரென்றும், குற்றம் மிக்கதாயின் அத்தொழிற்கு உரிய ால்லரென்றும் தெளிந்துகொள்க என அறிவுறுத்துவது,

  • குண நாடிக் குற்றமு நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்ககொளல் '

என்ற திருக்குறளாகும். குற்றமும் குணமும் ஒருங் குடைமை மக்களது இயல்பாயினும், தம்பாலுள்ள குற் றங்களை யுணர்ந்து அவற்றைப் படிப்படியே குறைத்து விலக்குதலும், நற்குணங்களே நாடி மேன்மேலும் பெருக்கிக் கொள்ளுதலும் அறிவுடைய நன்மக்களது கடமை என்பது இதல்ை குறிப்பாக அறிவுறுத்தப்