பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/860

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842

பன்னிரு திருமுறை வரலாறு


  • முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப்படும் ”

எனவரும் திருக்குறள், எல்லார்க்கும் நடுவாய் நின்று இறை புரிதலாகிய முறைசெய்தற்றன்மை இறைவ ைெருவனுக்கே சிறப்புரிமையுடையதென்பதனையும், அதனே இறையருளாற் பெற்று அதன் வழி முறை செய் யும் மன்னவன் பிறப்பால் மகனேயாயினும் முறை செய்தற் றெழிலால் இறைவனுகவே வைத்துப் போற் றப்பெறுவான் என்பதனையும் தெளிவாக விளக்கு கின்றது.

தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க் கிடைமருதனே 13-14-10)

என வரும் அப்பரருள்மொழி, மன்னவன் செங்கோன் முறைக்கும் உடனுய்த் துணை நின்று இறைவன் வழங் கும் அருள் நலத்தினேப் புலப்படுத்தல் அறியத்தக்க தாகும்.

ஊக்கமுடையார் ஒன்றை நினைத்துப் பெற முந்து வராயின், மக்கள் வாழ்வுக்கு நலம் பயக்கும் உயர்ந்த பொருளேயே எண்ணி முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கு ஊழ்வயத்தால் தடைபல நேர்ந்தாலும் அவர் தம் உள்ளக் கருத்தின் வன்மையால் அவர் எண்ணிய பொருளைத் தடையின்றிப் பெறுதல் உறுதி என்பது,

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து ?

என்ற குறளால் வலியுறுத்தப்பட்டது, உலகப் பொருள் களிற் சென்ற இத்தகைய உள்ளக் கிளர்ச்சியினே, உல கிறந்த ஒண்பொருளாகிய இறைவன் பாலும் செலுத் துக என அறிவுறுத்துவன,