பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 847

  • வானந் துளங்கிலென் மண் கம்ப மாகிலென்

மால்வரையும் தானந் துளங்கித் தலேதடுமாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரி சுடர் வீழிலென் வேலே நஞ்சுண் டுனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே {4–1 i2–8] என்ற திருவிருத்தத்துள் அப்பரடிகள் நன்கு விளக்கி யுள்ளார் ஊழி பெயரினும் என்பதனுல் குறிக்கப்படட ஊழிப்பெயர் ச்சியின் இயல்பினே இத்திருப் பாடலின் முதன் மூன்றடிகளும் விரித்துரைத்தல் காணலாம்.

விண்ணுேர் அமுதுண் ணவேண்டி ஒருவரும் உண் னக் கருதாத கொடிய நஞ்சினையுண்டும் ஊனமொன் றில்லா ஒருவகிைய இறைவனுக்கு ஆட்படுதலே சான் ருண்மை நிலேபெறுதற்குரிய நற்சார்பென்பதும், அச் சார்பினேப் பெற்ற இறைவனடியார்களாய சான்றேர் கள், உலகமெலாம் அழியவரும் ஊழிப்பெயர்ச்சியாகிய காலத்தும் தம் பெருமைக்குணங்களிற் சி நி து ம் திரிபடைய மாட்டார்கள் என்பதும் ஆகிய இவ் வுண்மையினே,

மண்பாதலம்புக்கு மால்கடல்மூடி டிற்றேழுலகும் விண்பால் திசை கெட்டிருசுடர் விழினும் அஞ்சல்

நெஞ்சே திண்பால் நமக்கொன்றுகண்டோம் திருப்பாதிரிப்புலியூர் கண்பாவுநெற்றிக் கடவுட்சுடரான் கழலினேயே

என வரூம் திருநாவுக்கரசர் அநுபவமொழியால் இனி துணரலாம்.

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்ருல் மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களில் திருவள்ளுவர் அருளிய திருக்குறட்கருத்துக்களும் சொற்களும் சொற்ருெடர் களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளமை இனிது விளங் கும். இங்கெடுத்துக்காட்டி விளக்கிய ஒப்புமைப் பகுதிகளேக் கூர்ந்து நோக்குங்கால் தேவர் குறளும் மூவர் தமிழும் ஒருவாசகம்’ என முன்னேச் சான் ருேர் ஒருவர் ஆராய்ந்துணர்த்திய பொருள்முடிபு உறுதி யாதல் நன்கு தெளியப்படும்.