பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 867

தேவார ஆசிரியர்கள். ஒரு தெய்வ வழிபாட்டை வலி யுறுத்துஞ் சமயமே சிறந்தது என்பர் அறிவர். திருமூல ரும் ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்’ எனச் சாதிவேறுபாடற்ற தனிப்பெருஞ் சிவ வழிபாட்டையே பாராட்டினர். இவ்வுண்மைகொண்டே,

“ஒருவன் கழல்அல்லாது எனது உள்ளம் உணராதே’

'கூத்தா நின்குறையார் கழலேயலாது

ஏத்தா நாவெனக்கு எந்தை பிராணிரே”

'அன்னே உன்னேயல்லால் இனியாரை நினேக்கேனே'

எனத் தேவார ஆசிரியர் மூவரும் போற்றியதோடு தம் பாடல்களில் முருகன், பிள்ளையார் முதலிய கடவுளர்களைக் குறிக்க நேர்ந்தவழி, தம்மால் வழிபடப் பெறும் சிவபெருமானுல் அவர்கள் தலேயளிக்கப் பெற்ற வர்கள் என்ற அளவில் அத்தெய்வங்களேப் பாராட்டி, தாம் சிவனைத் தவிர வேறுயா வரையும் நினையாத் தெளிவுடையாராகத் திகழ்கின்றனர்.

ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு நிகழ்ந்த திருமணத் தில் அக்காலத்தார் கொண்டொழுகிய தீவலஞ் செய்த லாகிய சடங்கினே ச் செய்யும்படி அங்குள்ள நான்மறை வேதியர்கள் ஞானசம்பந்தரை வேண்டினர். இறை வன் ஒருவனேயே வணங்கும் உறுதிப்பாடுடைய பிள்ளே யார்,

'யான் விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே'

என்னும் மெய்ம்மையினே உரைத்துத் திருநல்லூர்ப் பெருமணக்கோயிலே வலம் வந்து சுற்றத்தாரோடு பற்றறுத்து உய்ந்தசெய்தி பெரிய புராணத்தில் கூறப் பட்டுள்ளது. இவ்வாறே திருநாவுக்கரசரும் ஞாயிறு, தீ முதலிய புறப்பொருள் வழிபாட்டையும் பிற தெய்வ வழிபாட்டையும் கடிந்து உரைத்ததோடு சாதி வேறு பாட்டையும் இழித்துரைத்தமை அரசர் அருளிய தேவாரப் பாடல்களாற் புலனும்.