பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 88?

யினே விளக்கிக் கூறும் தொடர்களால் நன்கு தெளியப் படும்.

ஊர் தோறும் அமைந்த பொது-இல் எனப்படும் அம்பலத்திலே தெய்வம் உறையும் த றி யா கி ய துானென்று நாட்டப்பெற்றிருந்தது. நீராடித் தூய்மை யுடைய ராய மகளிர் பலரும் அம்பலத்தை மெழுகித் தூய்மை செய்து அந்தியில் நந்தா விளக்கேற்றி இறை வனே வழிபட்டனர். மக்கள் பலரும் அவ்வம் பல த் திலே நறுமலர் தூவிக் கடவுளே வழிபட்டுப் போற்றினர் கள். ஊருக்குப் புதிய ராயினர் அவ்வம்பலத்திலே தங்கியிருந்தார்கள். இச்செய்தி,

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்’

எனவரும் பட்டினப்பாலே யடிகளாலும்,

'பகைவர் மனேயோராய்ப் பிடித்துவந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையிலே சென்று முழுகி மெழு கும் மெழுக்கத்தினேயும், அவர்கள் அந்திக்காலத்தே கொளுத்தின அவியாத விளக்கத்தினேயும் உடைய பூக் களேச் சூட்டின. தறியினேயுடைய அம்பலம். கந்துதெய்வம் உறையும் தறி வம்பலர் சேக்கும் பொதியில்புதியவர்கள் பலரும் ஏறித் தொழுதற்குத் தங்கும் பொதியில். பொதியிலே மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளி ைர வைத்தார்; அதல்ை தமக்குப் புகழ் உளதாமென்று கருதி’ என இத் தொடருக்கு நச்சிஞர்க் கினியர் எழுதிய உரையாலும் நன்கு விளங்கும்.

இங்ங்ணம் பண்டை நாளில் ஊர்தோறும் தெய்வ முறையும் தறியாகிய கந்து நடப்பெற்ற பொதியில் என்னும் அம்பலங்களே, தேவார ஆசிரியர் காலத்தில்