பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1023

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 盘0翰亨

தெய்வம் என்று வேண்டுவர் ” என்பர் இறையனர் களவியலுரையாசிரியர். அவ்வாசிரியர் குறித்த வண்ணம் பகவதியாகிய கொற்றவையைப் பாலைநிலத் தெய்வமாக இளங்கோவடிகள் சிலப்பதிகார வேட்டு வரியிற் போற்றி யுள்ளமையும், முல்லை நிலத்தெய்வமாகிய மாயோனுக்குத் தங்கையும் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயும் ஆகிய கொற்றவை முல்பையுங் குறிஞ்சியும் திரிந்த பாலே நிலத்திற்குத் தெய்வமாதல் பெரிதும் பொருத்த முடைமையும் எண்ணிய சேக்கிழாரடிகள் பாலை நிலத் தெய்வமாகக் கொற்றவையைக் குறித்துள்ளார். கதிரவன் வெம்மையில்ை கடும்பகற் பொழுதில் அழகிய முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் திரிந்து வளங்குறைந்த சில இடங்கள், காடுகிழாள் ஆகிய பகவதி கோயில்களைத் தன்னகத்தே கொண்டு, பாலையென்று பெயர் சொல்லுதற் குரியனவும் தொண்டை நாட்டில் உள்ளன என்பதனை,

  • கோல முல்லையுங் குறிஞ்சியுந் திரிந்தசில் லிடங்கள்

நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலையுஞ் சொல லாவன வுனபரன் முரம்பு '

எனவரும் பாடலிற் குறித்துள்ளார். இங்ங்ணம் பாலை யெனப் பெயர் பெறுதற்குரிய இடமும் பொழுதுமாகிய இவற்றைக் குறித்துத் தொல் காப்பியன கும் சங்கப்புலவர் களும் இளங்கோவடிகளும் கனவியலுரையாசிரியரும் கூறிய கருத்துக்கள் எல்லாவற்றையும் வரலாற்று முறையில் தொகுத்துரைப்பதாக மேற் குறித்த பெரிய புராணச் செய்யுள் அமைந்திருத்தல் காண்க.

காடுறைவுலகமாகிய முல்லை நிலத்திற்கு மாயோளுகிய திருமால் தெய்வம் என்பதனை,

மாயோன் மேய காடுறையுலகமும் (தொல்-அகத்-5}

என வரும் தொல்காப்பியத் தொடர் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு அருந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் முல்லை நிலத் தெய்வமாகச் சிறப்பித்துரைக்கப் பெற்ற செங்கண்மாலால் தொழப் பெற்ற பெருமை வாய்ந்த சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்குஞ் சீர்த்தி வாய்ந்தது தொண்டை நாட்டில் உள்ள திருமுல்லை வாயில் என்ற திருத்தலம் என்பார்,