பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1029

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 意夺盘$

வந்தணைந்த திருத்தொண்டர் தம்மைவினை மாசறுத்துச் சுந்தரத் தாமரை புரையுந் துணையடிகள் தொழுதிருக்க அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள்புரிந்தார் .

(பெரிய-திருநாளைப்-36) எனச் சேக்கிழாரடிகள் குறித்துள்ளமை இவ்வீடு பேற்றின் திறத்தினை விளக்குமுறையில் அமைந்திருத்தல் காணலாம்.

" திருவடியே வீடாயிருக்கும் என்ருர் ; அது * தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன் கருனைத் தேன் காட்டி (திருவாசகம், 180) என்பதனுைம் பிறரும் திருவடியைக் கூறுமாற்ருனும் உணர்க’ என மேற்காட்டிய திருமுருகாற்றுப்படைத் தொடர்க்கு நச்சினுர்க்கினியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டியர்களின் தலைநகராகிய மதுரையினை,

கண்ணுர் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்தனே மதுகின் மதுரை (சிறுபாண் 65 - 87)

என நல்லூர் நத்தத்தனர் சிறப்பித்துள்ளார். கண்ணிற்கு அழகு நிறைந்த முடிமாலையினையும் விரைந்து செல்லும் தேரினை யும் థీ?.....! பாண்டியனது தமிழ்மொழி வீற்றிருந்த பொறுத்தற்கரிய பெரு மகிழ்ச்சியினைப் பொருந்திய தெருவினையுடைய மதுரை என்பது இத் தொடரின் பொருளாகும். தமிழ் நிலைபெற்றிருத்தலால் அந்நகரம் தாங்குதற்கு அரிய மிக்க மகிழ்ச்சியையுடையதா யிற்று என்பதாம். இவ்வாறு பாண்டியர்க்குரிய மதுரை நகரத்தில் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் ஆலவா யிறைவர், புலவர்களோடு ஒருங்கிருந்து தமிழ் ஆராய்ந்த தல்ை தமிழ் சிறப்பாக நிலைபெற்றிருத்தலும் தமிழைப் பயில்வார் உள்ளத்தே ஈரமுடைமையாகிய அன்பு நிரம்பி மகிழ்ச்சி பெருகுதலும் ஆகிய தன்மையினை,

மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்றசந்தின் மை வைத்த சோலை மலயந்தர வந்த மந்த மெய்வைத்த காலும் தரும் , ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழும் தரும் , செவ்வி மணஞ்செய் ஈரம்