பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 87

யோர் கருதுமாறு தனியடியாராகிய ஒருவரல்லர். மெய்ம்மை நெறிநின்று இறைவனைப் போற்றிப் பரவும் பெருங்கூட்டத் தினராகிய பலரையும் இத்தொடர் குறித்து நிற்பதென்னும் உணமையைத திருத்தொண்டத்தொகைக்கு வகை நூலாகத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி களும் விரிநூலாகத் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழாரடிகளும் தெளிவாகக் கூறியுள்ளார்கள். குடந்தை நகருக்கு அருகே இப்பொழுது தாராசுரமென மருவி வழங்கும் இராசராசேச்சுரத் திருக்கோயிலிற் சோழ மன்ன ரால் அமைக்கப்பட்ட திருத்தொண்டத் தொகையடியார்களைக் குறிக்கும் சிற்பங்களில் பொய்யடிமையில்லாத புலவரைக் குறித்த சிற்பத்தில் அடியார் பலர் குறிக்கப்பட்டிருத்தலைக் காண்கின்ருேம் ஆதலால் பொய்யடிமையில்லாத புலவர் என்னுந்தொடர் தனியடியாரொருவரைக குறித்ததன்றென் பதும் தொகையடியார்களேயே குறித்ததென்பதும் நன்கு தெளியப்படும் சிவபெருமானுல் வலிய வந்து வழக்குப்பேசித் தடுத்தாட்கொள்ளப்பெற்ற வன்ருெண்டர் மாணிக்கவாசகர் பெயரை வெளிப்படக் கிளந்தோதும் மனவலியின்றிப் பொய்யடிமையில்லாத புலவர் எனக் குறிப்பால் உணர வைத்தாரென் னுங் கூற்று, வன்ருெண் டரது மனவியல்புக்கு முற்றும் முரணுகும். சுந்தரர் காலம் முதல் இன்றுவரை பொய் யடிமையில்லாத புலவரைத் தொகையடியாராகவைத்து வழி பட்டு வரும் தொன்னெறி வழக்கிற்கும் இது முரண்படு ń.-: ۹ 2 ; پایه. R αν και γιΆ ά: # - Fr- # ... - கின்றது. அன்றியும் பாண்டிநாட்டுத் திருவாதவூரிற் பிறந் தருளிச் சைவ சித்தாந்த மெய்ந்நூ லிலக்கியமாகத் திகழும் திருவாசகச் செழுமறையைத் திருவாய் மலர்ந்தருளிய மணி

வாசகப்பெருமானை வடக்கிருந்து வந்த வீரசைவ மரபின ża # . o: _్క * * 岑 - ரெனத் துணிந்து கூறுதல் சிறிதும் ஏற்புடையதன்ரும்.

{A) மாணிக்கவாசகர் தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்டவராயின் கண்ணப்ப நாயஞர், சண்டீசப் பிள்ளையார் ஆகிய அடியார்களைத் தம் பாடல்களிற் போற்றிப் பரவிய அவ்வடிகள் சிவபெருமானது திருவருளே நிரம்பப் பெற்ற தேவார ஆசிரியர் மூவரையும் உளமுருகிப் போற்றி யிருப்பார் தேவார ஆசிரியர்களைப் பற்றிய குறிப்பெதுவும் திருவாசகத்திலும் திருச்சிற்றம்பலக் கோவையிலும் காணப் படாமையால் மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் காலத்தால்

மு ற்பட்டவரென்பது நன்கு ெதளியப்படும் என்பர்,