பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1037

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 箕》盛薰

வடநெடு வானமீனே அனையவர் (பெரிய-அரிவாட் - 13) எனவரும் பெரிய புராணத் தொடரில் இம்மரபு எடுத் தாளப் பெற்றிருத்தல் காணலாம்.

கண்ணகியை மணந்து மகிழும் கோவலன் அவளது நலத்தினைப் பாராட்டிக் கூறும் முறையில் அமைந்தது,

அடையார் முனையகத்து அமர்மேம் படுதர்க்குப் படை வழங்குவ தோர் பண்புண்டாகலின் உருவிலாளன் ஒருபெருங் கருப்புவில் இருகரும் புருவமாக ஈக்க (சிலப்-மனையறம் 42-45) எனவரும் சிலப்பதிகாரத் தொடராகும். பகைவர் முனையிடத்தே தம்மை மேம்படுத்தும் தறுகண் வீரர்க்குப் படைக்கலம் முதலியன கொடுத்தல் அரசர்க்கு இயல் பாதலால், மன்மதன் போர் செய்தற்கு எடுத்த ஒப்பில்லாத கருப்புவில் ஒன்றையும் கரிய இரண்டு புருவங்களாகத் திருத்தித் தருவானுக என்பது இதன் பொருளாகும். காமனுத்குக் காமநூலும் கரும்பும் ஆகிய இரண்டும் வில்லாயினும் (பூவாகிய காமது லினும் கரும்பு வலிய தாதலின் முனிவரங்கிய முரட்பகையை அழித்தற்கு வலிய வில்லே வேண்டுதலின் ஒரு பெருங் கருப்பு வில் என்ருர், ஒரு பெருங் கருப்புவில் இருகரும் புருவமாக என்றது. சேம வில்லையுங் கூட்டி வானுர்கமழ் மதுவுஞ் சாந்து மேந்தி மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசும், தேளுர் பூங்கோதாய் நினக்குக் காமன் சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித்தந்தான் தாளுரப்பண்ணித் தடறு நீக்கித்தண் குருதி தோய்த்துத் தகைமை சான்ற, ஊஞர்ந்த ஓரிணை அம்புந்தந்தான் என்னை யுளணுக வேண்டினனே (சீவக - 20.65 என்ருராதலின் " என்பது அடியார்க்கு நல்லார்தரும் விளக்கமாகும். திருமயிலை யில் திருஞானசம்பந்தர் திருப் பாடலால் உருப்பெற்றெழுந்த பூம்பாவையின் புருவப் பொலிவினை விளக்குமிடத்து,

புருவமென் கொடிகள் பண்டு புரமெரித் தவர்தம் நெற்றி ஒருவிழி எரியின் நீருய் அருள் பெற உளளுங் காமன் செருவெழுந் தனுவ தொன்றும் சேமவில் லொன்றும் ஆக இருபெருஞ் சிலைகள் முன்கொண் டெழுந்தன போல ஏற்ப "

(பெரிய-சம்பந்தர் - 1097) னைவரும் பெரிய புராணச் செய்யுள் மேற்குறித்த சிலப் பதிகாரத் தொடர்ப் பொருளை அடியொற்றி அமைந் திருத்தல் உணரத் தகுவதாகும்.