பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1060

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1044

பன்னிரு திருமுறை வரலாறு


உடைமை என்றும், உயிர்கள் ஆண்டவளுகிய அம் முதல்வனுக்கு அடிமை யென்றும் உணர்ந்து இறைவனது திருவருளின்வழி அடங்கி நடத்தலே மெய்யுணர்வுடை யோர் செயலாகும். இதனை,

  • எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனுமுணர்வும்

அப்பொருள் தான் ஆளுடையான் அடியார்கள் எனுமறிவும் இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும் துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந்தார்’

(பெரிய - சம்பந்தர் - க்)

எனவும்,

  • தம்மை யுள்ள வா றறிந்தபின் சங்கரற் கடிமை

மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கதோ ரன் பால் பொய்ம்மை நீங்கிய பொருளிதுவெனக் கொளும் பொற்பால் செம்மையே புரி மனத்தினர் சிவநேசரென்பார் .

(பெரிய - சம்பந்தர் - 1935)

எனவும் வரும் திருப்பாடல்களில் ஆசிரியர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை உணரத்தகுவதாகும். மேற்குறித்த * தம்மையுள்ளவாறறிந்தபின் என்னும் பெரிய புராணச் செய்யுட் பொருளை அடியொற்றிய நிலையில்,

  • தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்

எம்மையுடைமை யெமையிகழார் தம்மை உணரார் உணரார் உடங்கியைத்து தம்மிற் புனசாமை கேளாம்புறன் !

(சிவஞானபோதம் - அவையடக்கம்) என மெய்கண்ட தேவர் அவையடக்கங் கூறியுள்ளமை

இங்கு ஒப்புநோக்கி யுணரற்பாலதாகும்.

உயிர்கட்கு இருவினையொப்பு உண்டாகிய நிலையில் ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற்குரிய துனே க் காரணங்கள் எல்லாவற்ருேடும் கூடுதலாகிய மலபரிபாக மும், மலபரிபாகம் காரணமாகச் சத்தி நிபாதமும் உளவாகும். ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் ஆதல் இன்றிப் புண்ணிய பாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின் கண் அவ்விருவினையும் ஒப்ப நிகழ்தலே ஈண்டு இருவினை யொப்பு என்பதற்குப் பொருள் ” என்பர் சிவஞான முனிவர். திருஞான சம்பந்தப் பின்ளேயார் திருக்கரத்தால் திருநீறு பூசப்பெற்ற கூன் பாண்டியன் முன்னை வினை நீங்கி