பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1065

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் it}#}

9 முதல் 12 வரையுள்ள 5 பாடல்களும் கண்ணப்ப நாயனர் புராணத்தில் 158 முதல் 182 வரையுள்ள பாடல்களும் சருக்கங்களின் முடிவில் அமைந்த கூற்றுவர், கணம் புல்லர், முனையடுவார், கோட்புலியார் புராணங்களில் அடுத்துவரும் புராணங்களுக்குத் தோற்றுவாயாகவுள்ள நான்கு செய்யுட்களும் சில பிரதிகளில் இல்லாமையால் இவை வெள்ளி பாடல்கள் எனக் கருதப் பெறுகின்றன. 4253 செய்யுட்களால் அமைந்த இத்திருத்தொண்டர் புராணத்தில் ஆசிரியர் எடுத்தாண்டுள்ள இயலிசை யாப்பு விகற்பங்கள் நாற்பத்தெட்டாகும். இவை சந்தமலி செந் தமிழ்ப் பாடல்களாகிய தேவாரத் திருப்பதிகங்களின் இய லிசைத் திறத்தில் சேக்கிழார்க்குள்ள ஈடுபாட்டிற்கும் புலமைத் திறத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ் கின்றன.

மனு நீதிச் சோழர் வரலாற்றில் பண்டைத் தமிழ் வேந்தர்களது அறளுெடுபுணர்ந்த திறனறி செங்கோல் முறையினையும், தடுத்தாட்கொண்ட புராணத்தில் அக் காலத்தில் நம் நாட்டில் திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களில் நிலவிய ஊர்ச் சபைகளின் வழக்கியல் முgை வினையும் விரித்துக் கூறியிருப்பது கொண்டு சோழ மன்னர்க்கு அமைச்சராய் விளங்கிய ஆசிரியரது அரசியற் புலமையினை நன்கு உணரலாம். தமிழ் நாட்டின் அக நாடுகளையும் அதனகத்து அடங்கிய ஊர்களையும் தெளிவாகக் குறிக்கும் முறையில்,

மருகல் நாட்டுத் தஞ்சாவூர் மிழலை நாட்டுப் பெருமிழலை மழநாட்டுப் பெருமங்கலம் கோனுட்டுக் கொடி நகரம் கொடும்பாளுர் , மேற்கா நாட்டு ஆதனுர் சோழர் நீர் நாட்டிடைக் காவிரிவடகரைக் கீழ்பால் திருப்பெரு மங்கலம் ', ' வடவெள்ளாற்றுத் தென் கரைப்பால்...... இருக்கு வேளுர் பெருந் தொண்டை வளநாடதனில்

பாலி நதியின் வடபால் நலங்கொள்பதி வேற்காடு ' என இவ்வாறு இடஞ்சுட்டி விளக்கும் பகுதிகள் ஆசிரிய ரது நாடறி புலமையினை அறிந்துகொள்ளுதற்குச் சிறந்த

சான்ருக அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் திருவதிகையினை அடுத்துள்ள சித்தவட

மடம், திருநல்லூரில் அமர்நீதி நாயனர் கட்டிய திரு மடம், திருப்புகலூரில் முருக நாயனர் திருமடம், திருப்பூந்