பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1072

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 1

    • ణాrowtwar

தாராசுரம் இராசராசேச்சுரத் திருக்கோயிலிலுள்ள திருத்தொண்டத் தொகையடியார்களின் வரலாற்றுச் சிற்பங்கள்

கும்பகோணத்தை அடுத்துத் தென்மேற்கே ஒருகல் தொலைவில் உள்ளதும், இக்காலத்தில் தாராசுரம் என வழங்கப்பெறுவதும் ஆகிய ஊர், முற்காலத்தில் சோழர் தலை நகரங்களுள் ஒன்ருய் விளங்கிய பழையாறை நகரின் வடகீழ்ப் பகுதியாகும். கி. பி. 1146 முதல் 1183 வரை சோழநாட்டினை ஆட்சி புரிந்த இரண்டாம் இராசராச சோழன் பழையாறை நகரின கீழ்த்திசையில் மேலும் விரிவடையச் செய்து இர சாசபுரம் எனத் தன் பெயரால் வழங்கும் வண்ணம் அதனைத் தனது ஆலே நகராகக் கொண்டான். அந்நகரத்தின் வ. கீழ்த்திசையில் தன் பெயரால் இராசராசேச்சரம் என்னும் சிவாலயத்தினை அமைத்து, அதன் கண் இராசராசேச்சர முடையாராகிய இறைவரை எழுந்தருளுவித்து நாள் வழிபாடும் திருவிழாக் களும் சிறப்புற திகழச் செய்தான் இவ்வேந்தனுக்கு அவைக்களப் புலவராக விளங்கிய ஆசிரியர் ஒட்டக்கூத்தர், தக்கனது யாகம் வீரபத்திரக் கடவுளால் அழிக்கப்பட்ட பொழுது, உமாதேவியார்க்குப் போர்க்களங் காட்டி அங்கு இறந்தோர் எல்லோர்க்கும் அருள்புரியும் பொருட்டுச் சிவ பெருமான் எழுந்தருளிஞர் எனக்கூறும் நிலையில், இங்குள்ள இராசராசபுரியீசர் எழுந்தருளினுக் என்று தாம் இயற்றிய தக்கயாகப் பரணியிற் கூறியிருப்பது இத்திருக் கோயிலின் சிறப்பினை நன்கு புலப்படுத்துவதாகும், ! இரண்டாம் இராசராச சோழனுல் அமைக்கப்பெற்ற இராச ராசேச்சரமாகிய மாடக்கோயில் கண்டேசர் கண்களையும்

கருத்தினையும் ஈர்க்கும் சிற்பத்திறம் வாய்த்ததாகும். முற்

காலத்தில் மன்னர் போற்றும் பெருமையுடன் விளங்கிய

1. ஆராய்ச்சிப் பேரறிஞர் தி. வை. சதாசிவ பண்ட சத்தனச்

இயற்றிய பிற்காலச் சோழர் சரித்திரம், பகுதி 1 பக்கம் 115, 118.