பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

பன்னிரு திருமுறை வரலாறு


புத்தர்கள் தமது மன்னனிடம் தெரிவிக்க மன்னன் அவ்வடி யாரை யழைத்துப் பொன்னம்பலம் என்றதன் வரலாற் றைக் கேட்டறிந்து தனது குருவுடனும் தான் பெற்ற ஊமைப் பெண்ளுேடும் தில்லைப் பொன்னம்பலத்தை யடைந்து அங்குப் புத்த மதத்தை நிலைநாட்டுங் கருத்துடன் புறப்பட்டுத் தில்லையை யடைந்தனனென்றும், அப்பொழுது தில்லைப்பதியில் தங்கியிருந்த மணிவாசகப் பெருமான் புத்த குருவ்ை வாதில் வென்று ஊமைப் பெண்ணையும் பேச வைத்து இலங்கை மன்னனைச் சைவளுக்கினரென்றும் திரு வாதவூரடிகள் புராணம் கூறுகின்றது. இந்நிகழ்ச்சி மேற் காட்டிய ராஜ ரத்நாகரி யென்ற இலங்கைச் சரித நூல் கூறும் செய்தியுடன் ஒத்துக் காணப்படுதலால் அந்நூலிற் கூறப்படும் சைவசசாரியாரென்பவர் மணிவாசகப் பெரு மானை வழிபட்ட அடியார் குழுவினச் சார்ந்தவரெ பதும் இந்நிகழ்ச்சி நிகழ்த்ததாக ராஜ ரத்நாகரி யென்ற நூல் குறிப்பிடும் காலப் பகுதியாகிய கி. பி 819-ம் ஆண்டு, முதல் வரகுண பாண்டியனது ஆட்சிக் காலத்துள் அடங்கியதாத லின், மணிவாசகர் காலத்து ஆட்சிபுரிந்த பாண்டியன் முதல் வரகுண பாண்டியனே யென்பதும் நன்கு தெளியப்படு மென்க.

(5) தேவார ஆசிரியர்கள் தம் காலத்து வழங்கிய அறு வகைச் சமயங்களையும் சைவ சமயத்தின் உட்பிரிவுகளாகிய அகச்சமயங்களேயும் தம் பாடல்களிற் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் காலத்தில் ஏகான்ம வாதமென்னும் ம யாவாத மதம் தமிழ்நாட்டில் தோன்றி வழங்கியதில்லை. சேரநாட் டிற் பிறந்த சங்கராச்சாரிய சுவாமிகள்தாம் ஏகான்ம வாதத் தைத் தென்னுட்டிலும் வடநாட்டிலும் சிறப்பாக நிலைபெறச் செய்தவரென்பது பலரும் அறிந்த செய்தியாகும். திருவாத ஆரடிகள் தம் காலத்தில் மாயாவாதமென்னும் மதம் நாடு முழுதும் சண்டமாருதம் போல் விரைவிற் பரவி மக்கள் உள்ளத்தைக் கலக்கிய திறத்தை,

மிண்டிய மாயா வாத மென்னும்

சண்டமாருதம் சுழித் தடித்தார்த்து என்ற தொடரால் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே அடிகள் வாழ்ந்த காலம் ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தை

f

ாதவூரடிகள் புராணம், புத் தரை வாதில் வென்ற