பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் ili 3

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனுல் அவனரு ளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ண ந் தன் னே முந்தை வினை முழுதும் ஒய வுரைப்பன் யான் என இறைவன் திருவருட்டுணைகொண்டு தாம் சொல்லக் கருதிய பொருள் சிவபுராணம் என்பதனைத் தெளிவாக எடுத் துரைத்தார். இதல்ை சிவபுராணம் என்ற இப்பெயர், இம் முதற்பகுதிக்கேயன்றி அடிகள் அருளிய திருவாசகம் முழுவ தற்கும் பொருந்துமெனக் கொள்ளுதற்கும் இடனுண்டு. இங்ங்ணம் துதலிய பொருளை முன்மொழிந்த வாதவூரடிகள்,

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்

விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினை யேன் புகழுமா ருென்றறியேன் என்ற தொடரால் அவையடக்கமும் கூறினராயிற்று. எனவே நூன்முகத்து உரைத்தற்குரிய வாழ்த்து, வணக்கம், வரு பொருளுரைத்தல் ஆகிய மங்கல வாழ்த்தும் அவையடக்கமு மாக இச்சிவபுராணத்தின் முற்பகுதி அமைந்திருத்தல் காணலாம்.

உயிர்கள் புல் முதல் மக்கள் ஈருகவுள்ள உடம்புகளைப் பெற்றுப் பிறந்து ஓரறிவு முதல் ஆளுவதறிவெனப்படும் மனவுணர்வு ஈருகப் படிப்படியே அறிவினுற் சிறந்து வளரும் வளர்ச்சி முறையும், இங்ங்னம் பலவகைப் பிறப்புக்களிலும் பிறந்துழன்று தூய்மையடைந்த நல்லுயிர்களுக்கு இறைவன் திருவடிப்பேறு நல்கி அவ்வுயிர்களே ஆட்கொண்டருளுதலும், அறிவுநூல்களாகிய வேதங்களாலும் உணர்தற்கரிய அப் பரம்பொருள் உயிர்களின் நலங்கருதிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இயற்றுமுகமாக உயிர்களின் அறியாமையை அகற்றித் துாய்மை செய்து பேரின்பம் நல்கிப் பிறவிவேரறுக்கும் பெற்றியும், தாயிற்சிறந்த அருளாளனுகிய இறைவன் எல்லா மாய் அல்லவுமாய் நிற்குமியல்பும், தில்லைக்கூத்தணுகிய அவ் விறைவன் திருவடிகளை நெஞ்சம் நெக்குருகிப்பணிந்தேத்திப் பரவிய திருப்பாட்டின் பொருளுணர்ந்து சொல்லும் மெய்யடி யார்கள் பல்லோரும் போற்றச் சிவனடிக்கீழ் வைகும் பேரா

னந்தப் பெருவாழ்வு எய்தி இன்புறுவர் என்பதும் ஆகிய

8