பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 115

அடியார்கள் தீயிற்பாய்ந்து தம் உடம்பினை விடுத்து இறை வன அடைந்தமையும், கயிலைப் பெருமாளுகிய கடவுள் அன்பர்களுக்கு நேர்நின்று அருள்செய்தற் பொருட்டுப் புலியூர்ப் பொதுவாகிய பொன்னம்பலத்திலே புகுந்தருளின மையும் ஆகிய செய்திகள் இக் கீர்த்தித் திருவகவலின் இறுதிப் பகுதியிலே குறிக்கப் பெற்றுள்ளன. இக்குறிப் பினைக் கூர்ந்துநோக்குங்கால் திருப்பெருந்துறையில் அருட் குரவளுக எழுந்தருளிய இறைவன் பணித்தவண்ணம் வாத ஆரடிகள் தில்லைக்கு வந்தபொழுது இக்கீர்த்தித் திருவகவல் அருளிச் செய்யப்பெற்றதென்பது நன்கு புலனும்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்தினையடுத்து வான்சிறப்பு என்ற அதிகாரம் வைக்கப்பெற்றமை போன்று திருவாசகத் தில் கடவுள் இலக்கணமுணர்த்தும் சிவபுராணத்தையடுத்து இறைவனது இனிய திருவருளாகிய மழையின் சிறப்புணர்த்

ٹر8، سٹr: w: 4 *) =

தும் கீர்த்தித்திருவகவல் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தக்கதாகும்.

க. திருவண்டப்பகுதி

எல்லாம் வல்ல இறைவன், உலகப் பெரும்பரப்பாகிய அண்டங்களெல்லாம் இல்நுழைகதிராகிய வெயிலொளியில் விளங்கித் தோன்றும் நுண்ணிய அணுக்களைப் போன்று மிகச் சிறியனவாகத் தோன்றத் தான் அவற்றினும் மிகமிகப் பெரியவனுகி எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குதலாகிய பருமை நிலையினை யும, உயிர்க்குயிராய் உள் நின்று எவ்வகைப் பொருள்களையும் ஊடுருவி இயக்கியருளும் நுண்மை நிலையினை யும் ஒருங்குடையவனுவன். இவ்வுண் மையை அவனருளாலே உணரப்பெற்ற வாதவூரடிகள், அம் முதல்வனது துாலசூக்கும நிலையை வியந்து டோற்றுவதாக அமைந்தது திருவண்டப் பகுதியாகிய அகவலாகும். இஃது அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் எனத் தொடங்கி அண்டப் பரப்பின் உள்ளும் புறம்பும் திகழும் இறைவனது பேராற்றலை விரித்துக் கூறுவதாதலின் திருவண்டப்பகுதி ! என வழங்கப் பெறுவதாயிற்று. அண்டப் பகுதி ' என்னும் இது, ஆத்திசூடி என்ருற்போலப் பாட்டின் முதற் குறிப்பாற் பெற்ற பெயராகும். இணைக்குறளாசிரியப்பாவாகிய இது, 182 அடிகளையுடையதாகும்.